பருவ மழையால் பள்ளி சிறுவர்களுக்கு எளிதில் "தொற்று நோய்' பரவும் அச்சம் நிலவுகிறது. இதை தவிர்க்க பள்ளி வளாகத்தில் குப்பை தேங்காத வண்ணம், கல்வித்துறையினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நோய் அச்சம்: தற்போது பெய்து வரும் பருவ மழைக்கு, வீடுகளை சுற்றியுள்ள ஆட்டுக்கல், தொட்டி, சிறட்டை, டயர் உள்ளிட்ட பொருட் களில் மழை நீர் தேங்காத வண்ணம் கண்காணிக்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. வீடு தோறும் செல்லும் மஸ்தூர் ஊழியர்கள், வீட்டு "பிரிட்ஜிற்கு' பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் டப்பாவில் கூட, தண்ணீர் தேங்க கூடாது என வலியுறுத்துகின்றனர்.
அவசியம்: அதேநேரம், "டெங்கு' நோய்க்கு அதிகளவில் மாணவர்கள் தான் எளிதில் பாதிக்கப்பட கூடும். எனவே, அவர் களின் சுகாதாரத்தை காப்பதில், மாவட்ட நிர்வாகம் உறுதியாக இருத்தல் வேண்டும். பெரும்பாலான பள்ளி வளாகம், பள்ளி கட்டடத்திற்கு பின் பகுதியில், குப்பையை கொட்டு கின்றனர். பள்ளிகளை சுற்றி மழைநீர் தேங்க கூடிய, தொட்டி, டயர், சிறட்டை உட்பட தேவையற்ற பொருட்கள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன.
இதில் தேங்கும் நீரில், "லார்வா' புழுக்கள் மூலம் "டெங்கு' பரப்பும் கொசுக்கள் உருவாகி மாணவர்களை கடிக்கும் பட்சத்தில் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். பள்ளி வளாகங்களை சுத்தம் செய்யும் பணியில் இருக்க வேண்டிய வாட்ச்மேன், துப்புரவு ஊழியர் போன்ற பணியிடங்கள் பெரும்பாலான பள்ளிகளில் காலியாகவே உள்ளன.
எனவே, பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்காத வண்ணம் சுகாதார பணிகளை மேற்கொள்ளவேண்டிய பொறுப்பினை, கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...