தமிழகத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு, இழப்பீடு வழங்க
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில், பொது காப்பீட்டு துறையில், மத்திய அரசின், நான்கு; தனியார்,
21 என மொத்தம், 25 நிறுவனங்கள் உள்ளன.
இவை, வாகனங்களுக்கு, மூன்றாம் நபர் இன்சூரன்ஸ்;
'காம்ப்ரஹென்சிவ் இன்சூரன்ஸ்' என்ற முழுமையான இன்சூரன்ஸ் என, இரண்டு வகை
திட்டங்களை வழங்குகின்றன. இதில், வாகன ஓட்டிகள், மூன்றாம் நபர் இன்சூரன்சை,
கட்டாயம் எடுக்க வேண்டும்.
மூன்றாம் நபர் இன்சூரன்சில், வாகனம் விபத்துக்கு உள்ளாகும் போது, அதில்
பாதிக்கப்படும், எதிர் தரப்பிற்கு இழப்பீடு வழங்கப்படும். முழு இன்சூரன்ஸ்
எடுத்திருந்தால் விபத்து, தீ, வெள்ளம், நிலநடுக்கம், திருட்டு போன்றவற்றின்
போது, வாகன உரிமையாளர் இழப்பீடு கோர முடியும். இதனால், மூன்றாம் நபர்
இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை விட, முழு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை
அதிகம்.தமிழகத்தில், மோட்டார் சைக்கிள், கார், பஸ் உட்பட மொத்தம், 2.05
கோடி வாகனங்கள் உள்ளன. இதில், இன்சூரன்ஸ் செய்துள்ள, 1.50 கோடி
வாகனங்களில், 60 லட்சம் வாகனங்கள், சென்னை, காஞ்சி, திருவள்ளூரில்
ஓடுகின்றன.
இதில், 30 லட்சம் வாகனங்களுக்கு மட்டும் தான் முழு இன்சூரன்ஸ் உள்ளது.கடந்த
வாரம், சென்னை மற்றும் புறநகரில் பெய்த கன மழையில், ஏராளமானவாகனங்கள்
நீரில் மூழ்கி உள்ளன. அவற்றில், முழு இன்சூரன்ஸ் செய்தவர்கள்,
சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து, இழப்பீடு
பெறலாம்.
இழப்பீடு பெறுவதற்கானவழிமுறை* மழையில் பாதித்த வாகனத்தை, பழுது பார்க்கும்
மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்* மெக்கானிக் சேதத்தை ஆய்வு செய்து,
'எஸ்டிமேட் காஸ்ட்' என்ற உத்தேச செலவு அறிக்கை வழங்குவார்.அதனுடன்,
இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செல்ல வேண்டும்* அங்கு, நிறுவனம் தரும்,
'கிௌய்ம் பார்ம்' என்ற இழப்பீடு படிவத்தை பூர்த்தி செய்து, உத்தேச செலவு
அறிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டும்* இன்சூரன்ஸ் நிறுவனம்,
மதிப்பீட்டாளரை அனுப்பி வாகனத்தை ஆய்வு செய்யும்; அவர், நிறுவனத்தின்
ஊழியர் அல்ல* மதிப்பீட்டாளர், வாகனத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கையை
இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்குவார்* நிறுவனம், தான் ஒப்பந்தம் செய்துள்ள
பழுது பார்க்கும் மையத்தில் வாகனத்தை ஒப்படைக்க பரிந்துரைக்கும்
* வாகன உரிமையாளர், அதை ஏற்காவிட்டால், தன் விருப்பப்படி, எங்கு வேண்டு
மானாலும் பழுதை சரி செய்யலாம். அதற்கான ரசீதை, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம்
வழங்க வேண்டும். வாகனம் தயாரிக்கப்பட்ட ஆண்டை பொறுத்து, தேய்மான செலவை
பிடித்து கொண்டு, இழப்பீடு தொகை வழங்கப்படும்.
ஆனால், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மழையால் பாதித்த
வாகனங்களுக்குஇழப்பீடு தர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி
உள்ளது. இதற்காகவே, 'மழையில், வாகனம் இயக்க வேண்டாம்' என பாலிசிதாரர்களின்
அலைபேசிகளுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றன.
இதுகுறித்து, தென்மண்டல பொது காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலர்
ஆனந்த் கூறியதாவது:நீரில் மூழ்கிய வாகனத்தை, 'ஸ்டார்ட்' செய்யாமல், மற்றொரு
வாகனத்தின் உதவியுடன், பழுது பார்க்கும் மையத்திற்கு எடுத்து வர வேண்டும்.
'ஸ்டார்ட்' செய்து விட்டால், இழப்பீடு கோர முடியாது. முறையாக பிரீமியம்
செலுத்தி வருபவர்களுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இழப்பீடு தொகை வழங்க
வேண்டும்.
அவ்வாறு, வழங்கவில்லை என்றால், சென்னை, தேனாம்பேட்டையில், இன்சூரன்ஸ்
குறைதீர்க்கும் மையத்தில், பாலிசிதாரர் புகார் செய்யலாம். அதில், நிறுவனம்
மீது தவறு இருந்தால், பாலிசிதாரருக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...