விஐடி பி.டெக் பொறியியல் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப
விநியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். விஐடி
பல்கலைக்கழகத்தின் வேலூர், சென்னை வளாகங்களில் நிகழாண்டு பி.டெக் பொறியியல்
பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு
முழுவதிலும் 92 தலைமை தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் தலைமை தபால் நிலையத்தில் நுழைவுத் தேர்வு
விண்ணப்ப விற்பனையை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடக்கி வைத்தார். வேலூர்
வளாகத்தில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி,
கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு என்ஜினீயரிங் ஸ்பெசலைசேஷன் இன் பயோ
இன்பர்மேடிக்ஸ், சிவில், கெமிக்கல் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ்
அண்டு என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷசன் என்ஜினீயரிங்,
எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு
இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, மெக்கானிக்கல், ஸ்பெசலைசேஷன்
இன் எனர்ஜி, புரடக்ஷன் அண்டு இண்டஸ்டிரியல் என்ஜினீயரிங் உள்ளிட்ட
பொறியியல் பட்டப் படிப்புகளில் சேருவதற்கும், சென்னை வளாகத்தில் பி.டெக்,
சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்,
எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல்
பட்டப்படிப்புகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
அடுத்தாண்டு (2016) ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை இணையதள
முறையில் நாட்டில் உள்ள 118 முக்கிய நகரங்கள், துபை, குவைத், மஸ்கட்
உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
விண்ணப்பங்களைப் பெற ரூ. 990 செலுத்தி தலைமை தபால் நிலையங்களில் பெற்றுக்
கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in என்ற
இணையதளம் மூலம் ரூ. 990 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத்
தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்தாண்டு பிப்ரவரி 29-ஆம் தேதி கடைசி நாளாகும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...