இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ''நான்
கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே'' என்றான்.
தோற்றவனும் சம்மதித்தான். வென்ற மன்னனின் காதலி அவனிடம் ஏற்கெனவே ஒரு
கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொன்னால் தான் திருமணம்னு சொல்லியிருந்தாள்.
அந்தக் கேள்வி ''ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்'' __ . அதையே
தோற்றவனிடம் கேட்டான்.
தோற்ற மன்னனோ குழம்பி பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை. கடைசியா சிலர்
சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் போய்க் கேட்டான். ''அதற்கு கிழவி
நான் விடை சொல்கிறேன் அதனால் அவனுக்கு திருமணம் ஆகும். உனக்கு உன் நாடு
கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்''னு கேட்டாள். ''என்ன கேட்டாலும்
தருகிறேன்'' னான் தோற்ற மன்னன்.
அவள் சொன்னாள் ''தன் சம்பந்தமான முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே பெண்ணின் ஆழ் மனது எண்ணம்''..
இந்த பதிலை அவன் மற்ற மன்னனிடம் போய் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல,
அவள் சந்தோஷப்பட அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது
கிழவியிடம் வந்தான், ''வேண்டியதைக் கேள்'' என்றான். அவள் கேட்டாள். ''நீ
என்னை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும்'' கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன்
ஒப்புக் கொண்டான். உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளிச்சா.
அதோட அவள் சொன்னாள். ''நாம் தனியாக இருக்கும்போது கிழவியாக இருந்தால்
உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். தனியே இருக்கும் போது அழகிய
தேவதைப் பெண்ணாய் இருந்தால் வெளியே செல்கையில் அகோரமான சூனியக்காரக்
கிழவியாகி விடுவேன். எது உன் விருப்பம்?'' னாள். அவன் யோசிக்காமல் சொன்னான்
'' இது உன் சம்பந்தப்பட்ட விஷயம். முடிவு நீ தான் எடுக்க வேண்டும்''.
அவள் சொன்னாள் '' முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் உனக்கு அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்!''
- ஆம்! நிஜமாவே பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது
தேவதையா இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது அவ
சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள். அதனால அவங்களை அனைவரும் புரிந்து
செயல்பட்றது நல்லது!
- இந்தக் கதை கற்பனையாக இருந்தாலும் இதில் உள்ள கருத்தால் இன்பமாக வாழ்த்துக்கள் . . . .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...