அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து,
அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழை
வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 12
வேலை நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பள்ளிகள்
திறக்கப்படுகின்றன.
விடுமுறையால் அரையாண்டுத் தேர்வு தேதியை ஒரு வாரம்
தள்ளி வைத்து, விடுமுறை நாட்களைக் குறைக்க அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால்,
விடுமுறையை ரத்து செய்யக் கூடாது என பெற்றோர் தரப்பில் கோரிக்கை
எழுந்ததால், அரையாண்டுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்த, அனைத்து
பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை அவசர, அவசரமாக பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட
முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே அறிவித்த படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 -விற்கு டிச.7-ம்
தேதியும்; 10ம் வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், மாற்றமின்றி தேர்வு நடத்தி
முடிக்க வேண்டும். இதேபோல், சமச்சீர் கல்வி பாடத் திட்டப்படி, 9-ம்
வகுப்புக்கு டிச.9-ம் தேதியும், 6ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்புகளுக்கு
டிச.14-ம் தேதியும் இரண்டாம் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும்.
அனைவருக்கும் டிச.22-ல் தேர்வுகள் முடிக்கப்படுகிறது.
இதையடுத்து, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...