சிவகங்கை,:சிவகங்கை மாவட்டத்தில் தேசிய வங்கிகளில் கல்விக் கடன்
பெற்றவர்களிடம் அசலுக்கு மேல் வட்டி கேட்பதாக பாதிக்கப்பட்ட பொறியியல் பெண்
பட்டதாரிகள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.கடந்த காங்.,
ஆட்சியின் போது, நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்க
வங்கிகள் மூலம் கல்வி கடன் வழங்கச் செய்தார். தேசிய வங்கிகள் பொறியியல்,
மருத்துவம், பி.எட்., உள்ளிட்ட படிப்பிற்கு கல்விக் கடன் வழங்கின. கடன்
பெறும் மாணவர்கள்,படிப்பை முடித்து, வேலை தேடுவதற்கு 6 மாதம் ஆகும். அது
வரை கடன் பெற்றோரிடம் வட்டி வசூலிக்கப்படமாட்டாது என வங்கி தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
குட்டி போடும் வட்டிகொல்லங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் சிலர்,
கடந்த 2010ல் காளையார்கோவிலில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் ஆண்டுக்கு
ரூ.46,500 வீதம் 4 ஆண்டுக்கு ரூ.1.82 லட்சம் கல்விகடன் பெற்று, பொறியியல்
பட்டம் பெற்றனர். படிப்பு முடித்தவுடன், வேலைக்கு சேர்ந்தவர்கள்
மாதந்தோறும்
வங்கியில் பெற்ற தொகையை வட்டியுடன் செலுத்த முன் வந்தனர்.இது குறித்து
விசாரிக்க வங்கிக்கு சென்றபோது, கடன் பெற்ற மாதத்தில் இருந்தே வட்டி
கணக்கிடப்படுவதாக தெரிவித்துள்ளனர். 4 ஆண்டில் ரூ.1.82 லட்சம் பெற்ற
பொறியியல் பெண் பட்டதாரி ஒருவருக்கு அசல், வட்டியுடன் ரூ.2.75 லட்சம் வரை
கட்ட வேண்டும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சூழல் அங்கு கடன்
பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்
ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியுற்ற மாணவிகள் சிலர் நேற்று கலெக்டர்
எஸ்.மலர்விழியிடம் புகார் அளித்தனர். முன்னோடி வங்கி மேலாளர் விசாரணைக்கு
கலெக்டர் பரிந்துரை செய்தார்.
தேசிய வங்கி மேலாளர் ஒருவர் கூறுகையில்,“கல்வி கடன் பெறும் மாணவர்கள்,
அவர்கள் கல்வியை முடித்து 6 மாதம் வரை அசல், வட்டி கேட்கமாட்டோம். அதே
நேரம், அவர்கள் கடன் பெற்ற மாதத்தில் இருந்து, கடனுக்கு தனி வட்டி மட்டுமே
போடுவோம். பட்டம் பெற்று, 6 மாதத்திற்கு பின்னும் அசல்,வட்டியை கட்டாமல்
விட்டால் தான், அசலுடன் வட்டியை சேர்ப்போம். அரசு வட்டி சலுகை தொகையை
வழங்கிய பின் கழிக்கப்படும்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...