கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட கஞ்சம்பட்டி அருகே உள்ள பொன்னேகவுண்ட னூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 11 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் தலைமை ஆசிரியரே வகுப்பறையை திறப்பது வழக்கம்.
இதையறிந்த மாவட்ட துவக்க கல்வி அலுவலர் காந்திமதி, பொன்னேகவுண்டனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது, பள்ளி வகுப்பறை பூட்டியிருப்பதை பார்த்தார். பின் பூட்டை உடைத்து வகுப்பறை திறக்கப்பட்டது. தொடர்ந்து கஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணி பு ரியும் ஆசிரியர் ஒருவரை வரவழைத்து, பிற்பகலுக்கு பின் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. இது குறித்து மாவட்ட துவக்க கல்வி அலுவலர் காந்தி மதி கூறுகையில், ‘பொன்னேகவுன்டனூரில் உள்ள துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் விஜயலட்சுமி என்பவர், நேற்று எந்த வித தகவலும் தெரிவிக்காமல் விடுப்பு எடுத்துள்ளார்.
இதனால், பள்ளி வகுப்பறை பூட்டு உடைக்கப்பட்டு, மதியம் முதல் மாற்று ஆசிரியர் மூலம் பாடம் கற்பித்து கொடுக்கப்பட்டது. பள்ளி பொறுப்பில் உள்ள ஆசிரியர்கள் யாராக இருந்தாலும், விடுப்பு எடுக்கும் போது முறையான தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விதி முறை உள்ளது. ஆனால், விஜயலட்சுமி எந்த வித தகவலும் தெரிவிக்காமலும், பள்ளி வகுப்பறைக்கான சாவியை கொடுக்காமலும் இருந்துள்ளதால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என் றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...