Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதகை அருகே அரசுப் பள்ளி அறைகள், ஆவணங்கள் எரிப்பு

          உதகை, நஞ்சநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் இரண்டு அறைகள், அங்குள்ள அலுவலகத்திலிருந்த ஆவணங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இப்பள்ளி வளாகத்திலிருந்த விவேகானந்தரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
 
         படகர் இன மக்கள் வசிக்கும் மிகப்பெரிய கிராமம் நஞ்சநாடு ஆகும். இந்த கிராமத்தில் பாரம்பரியமாக வசித்து வரும் படகர் இனத்தார், புதிதாக கிராமத்திற்கு வந்த படகர் இனத்தார் என இரு பிரிவுகள் உள்ளன. இதனால், இந்த கிராமம் பதற்றம் நிறைந்த கிராமமாக அறிவிக்கப்பட்டு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு ஒரு பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக மற்றொரு பிரிவினர் தங்கள் குடியிருப்புகளை விட்டு கிராமத்திற்கு வெளியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு இப்பள்ளி வளாகத்தின் கூரையை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் கட்டிக் கொடுத்துள்ள இரண்டு அறைகளையும் தீ வைத்து எரித்துள்ளனர். அத்துடன் அந்த அறையிலிருந்த மேசைகள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சான்றிதழ்களையும் எரித்துள்ளனர். மேலும், அங்குள்ள சுவாமி விவேகானந்தரின் சிலையையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, உதகை புறநகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், உதகை கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களும் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive