Home »
» பைக்: மழைக்கால பராமரிப்பு
- மழை காலத்தில், பைக் ஓட்டுபவர்களுக்கு சிக்கல் அதிகம். சில வழிமுறைகளை கையாண்டால், மழை காலத்தை கவலையின்றி எதிர்கொள்ளலாம்.
- மழையில் நிறுத்த வேண்டியிருந்தால், சாவி துவாரத்தை மூட வேண்டும்; இல்லையெனில், பைக், ‘ஸ்டார்ட்’ ஆகாது
- பைக் மேற்புறம் துருப்பிடிக்காத வகையில், விலை குறைவான, ‘ஆன்டி-ரஸ்ட்’ பூச்சு, மழை காலத்தில் கைகொடுக்கும்
- பைக்கில் டயர் தேயாமலும், காற்று சரியான அளவிலும் இருக்க வேண்டும்.
இல்லாவிடில், ‘பிரேக்’ பிடிக்கும் போது நிலை தடுமாறி விழும் அபாயம் உள்ளது
- மழை நீர் அமிலத்தன்மை உடையது என்பதால், பைக்கில் மழை நீர் படாதபடி மூடி வைக்க வேண்டும்
- வெயில் காலத்தில், டயரில் காற்று விரிவடையும்; மழை காலத்தில் காற்று
சுருங்கும். அதனால், மழை காலத்தில் காற்றின் அளவை சிறிது அதிகரிக்கலாம்
- காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ‘ஏர் பில்டரில்’ அடைப்பு ஏற்படக்கூடும்.
- ‘டிஸ்க் பிரேக், டிரம் பிரேக்’ என, எதுவாக இருந்தாலும், பிரேக் சரியாக
வேலை செய்கிறதா என, பரிசோதித்து பார்த்த பிறகு புறப்படுவது உசிதம்.
- ஓட்டுவோர் கவனத்துக்கு...
- சாலைகள் ஈரமாக இருந்தால், ‘பிரேக்’ பிடித்தால் வழுக்கி விடும். அதனால்,
வழக்கத்தை விட வேகம் குறைவாக சென்றால், பிரச்னை ஏற்பட்டாலும் சமாளிக்கலாம்
முக்கியமாக, ஸ்கூட்டரில் உள்ள சிறிய சக்கரம் எளிதில் வழுக்கி விடும்
என்பதால் கூடுதல் கவனம் தேவை
- வாகனத்தின் முன்னும் பின்னும் அதிக இடைவெளி இருக்கும் வகையில், பைக் ஓட்டவேண்டும்.
- கார்களில் பக்கவாட்டு கண்ணாடிகள் மங்கலாகி, ஓட்டுனருக்கு சாலை சரியாக தெரியாது; அதனால், கார்களை கடக்கும் போது எச்சரிக்கை தேவை
- பெரிய வாகனங்கள் வேகமாக செல்லும் போது, பைக் ஓட்டிகள் மீது சேற்று நீர் தெரிக்கும். அதற்காகவாவது, மழை கோட் அணிய வேண்டும்
- ‘ஹாரன்’ மற்றும் முகப்பு விளக்கு மிகவும் முக்கியம் என்பதால், பேட்டரி பராமரிப்பு மிகவும் அவசியம்
- சாலையில் திரும்பும் முன் சிக்னல் செய்தால், பின்னால் வருவோருக்கு
சரியாக தெரியாது. அதனால், ‘இண்டிகேட்டர்’ பழுதில்லாமல் பார்த்து கொள்ள
வேண்டும்
- பைக்கில் பெட்ரோல் அளவு, ‘ரிசர்வ்’ நிலைமைக்கு போகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...