Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நோய் தடுப்பு: பள்ளிகளுக்கு உத்தரவு

       பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


*.பள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்யவேண்டும்
*.பள்ளி வளாகங்களில், குப்பை தேங்காமல் உடனே அகற்ற வேண்டும் *.கொசு உற்பத்தியை தடுக்க, பயன்படுத்தாத பொருட்களை உடனே அகற்ற வேண்டும் *.நீர்த்தேக்கம் உள்ள இடங்களின் அருகில், மாணவ, மாணவியர் செல்லாமல் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் *.நோய் தொற்று ஏற்படாமல், அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் *.பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மின் சாதனங்கள் மற்றும் மின் கட்டமைப்புகளை சோதனை செய்து, மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறுஅந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive