புதுடில்லி:தேர்தலில் ஓட்டுப்பதிவு
செய்ததற்கு அடையாளமாக, ஆட்காட்டி விரலில், பிரஷால் அழியாத மை வைப்பதற்கு
பதில், 'மார்க்கர்' பேனாவை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் ஆலோசித்து
வருகிறது.
தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்ததற்கு அடையாளமாக, பாட்டிலில் நிரப்பப்பட்ட அழியாத மையை, பிரஷில் எடுத்து, ஓட்டு போட்ட நபரின் ஆட்காட்டி விரலில் அடையாளம் பதிப்பது, 1962 முதல், நடைமுறையில் உள்ளது.ஆனால்,
'பிரஷ் மூலம், கைவிரலில் மை வைப்பது, நேர்த்தியாக இல்லை' என, இளம்
வாக்காளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும், தேர்தல் சமயங்களில்,
இங்க் பாட்டில் மற்றும் பிரஷ்களை எடுத்து செல்வதை காட்டிலும், மார்க்கர்
பேனாக்களை எடுத்துச் செல்வது எளிதென, தேர்தல் கமிஷன் கருதியது.இதையடுத்து,
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 'மைசூர் பெயின்ட்ஸ்' நிறுவனம் சப்ளை செய்த,
மார்க்கர் பேனாவை பயன்படுத்தி, அதன் அழியாத தன்மை சோதிக்கப்பட்டு
வருகிறது.'மார்க்கர் பேனா மீதான சோதனை அடிப்படையில், இறுதி முடிவு
எடுக்கப்படும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வகை மார்க்கர் பேனாக்கள், ஆப்கானிஸ்
தான் நாட்டில், சமீபத்தில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநில அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ்
தயாரிக்கும் அழியாத இங்க், வேறு சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
செய்யப்பட்டு வருகிறது.
Really it is superb
ReplyDeleteI like
ReplyDelete