மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில்
செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல்
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க்,
தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 31
1. Deputy Engineer (Electronics)- 04
2. Deputy Engineer (Mechanical)- 11
3. Lab Technician-C- 02
4. Technician-C- 06
5. Clerk-cum-Computer Operator-C- 04
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ்
மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக்
முடித்திருக்க வேண்டும்.
லேப் டெக்னீசியன்-சி பணிக்கு இயற்பியல், ஒளியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
டெக்னீசியன்-சி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
கிளார்க் பணிக்கு பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் MSCIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் உதவியாளர் பணிக்கு பொறியியல் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.11.2015
தேதியின்படி பொது பிரிவினருக்கு 28-க்குள்ளும், பிற்பட்டோருக்கு
31-க்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும்.
மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி
பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை Bharat Electronics
Limited என்ற பெயருக்கு புனேவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து
அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Dy. General Manager (HR& A),
Bharat Electronics Limited, NDA Road,
Pashan, Pune - 411021 (Maharashtra)
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:09.12.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://bel-india.com/sites/default/files/Recruitments/ShortTermEngers.-BEL-webAD-24.11.2015.pdf
என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...