வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவ.,9) நடைபெறுவதாக இருந்த செமஸ்டர்
தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விடுமுறை அறிவிப்பு :
தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவாரூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர்,
புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், நாமக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர்,
விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி,
கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை பல்கலை.,யில் இன்று
நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு
நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலை.,க்கும்
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை தொடரும் :
வங்ககடலில் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்
புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலாக மாறினால் அதற்கு ரோனு என பெயரிடப்படும் புதுச்சேரிக்கு கிழக்கு
தென்கிழக்கே 300 கி.மீ., தொலைவில் புயல் நிலைக் கொண்டுள்ளது. இந்த புயல்
சின்னம் மேற்கு வடமேற்காக நகர்ந்து புதுச்சேரி அருகே இன்று (நவ.,9) இரவு
கரையை கடக்கும். இதனால் தமிழகத்தின் வடகடலோர பகுதிகளில் மணிக்கு 60 முதல்
70 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்
என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். சென்னையில் வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யவும்
வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூறாவளி காற்று :
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, புதுச்சேரி, கடலூர் ஆகிய
மாவட்டங்களில் பலத்த புயல் காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில்
மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பல இடங்களில் மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்பதால் கடலோர
மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம்
எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...