திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்
பள்ளியில் மது அருந்திவிட்டு தேர்வு எழுதிய மாணவிகள் 7 பேர் பள்ளியை விட்டு
நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 3
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 6-ம்
வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி
பயிற்றுவிக்கப்படுகிறது.இந்தப் பள்ளியில் திருச்செங்கோடு மற்றும் அதன்
சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தமிழகத்தில்
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கடந்த 16 ம் தேதி பள்ளிக்கு விடுமுறை
அளிக்கப்பட்டது. அன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
அதன்படி நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் கடந்த 21 ம் தேதி (சனிக்கிழமை)
நடத்தப்பட்டது. இதற்காக பிளஸ்-1 வகுப்பின் ஓ.எஸ்.எஸ்., கம்ப்யூட்டர்
சயின்ஸ் உள்ளிட்ட பாடப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகள் மட்டும் தேர்வு எழுத
அழைக்கப்பட்டு இருந்தனர். அன்று(சனி) காலை 9.30 மணிக்கு நடைபெற இருந்த
தேர்வுக்கு, காலை 8.30 மணிக்கே அனைத்து மாணவிகளும் பள்ளிக்கு வந்து
காத்திருந்தனர். ஆனால் தேர்வு நடத்த வேண்டிய ஆசிரியைகள் பள்ளிக்கு
காலதாமதமாக வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை சாதகமாகப் பயன்படுத்திய சில
மாணவிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த மது பாட்டில்களை குளிர்பான
பாட்டிலுக்குள் ஊற்றி கலந்து வைத்துக் கொண்டனர். பின்னர் தொடர்ந்து
வகுப்றையில் அமர்ந்து கொண்டு குளிர்பானத்தை குடிப்பதாகக் கூறி
குடித்துள்ளனர். அத்தோடு அவர்கள்,வகுப்பறையில் இருந்த சக மாணவிகளுக்கும்
கொடுத்ததால் சில மாணவிகள் போதை தலைக்கேறி மயங்கி விழுந்துள்ளனர். மேலும்,
சில மாணவிகள் வகுப்பறையில் வாந்தி எடுத்து செய்வதறியாமல் நிலை
தடுமாறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் காலதாமதமாக நடந்த தேர்வில் கலந்து
கொண்ட மாணவிகள் மது மயக்கத்திலேயே தேர்வு எழுதியதால் சக மாணவிகள் மத்தியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சகமாணவிகள், இது குறித்து பள்ளி தலைமை
ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை,
மது அருந்தி விட்டு மயக்கத்தில் தேர்வு எழுதிய மாணவிகளைத் தனியாக
அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். அதில் 7 மாணவிகள் குளிர் பானத்தில்
கலந்து மது அருந்தியது தெரியவந்தது. பின்னர் அந்த மாணவிகளின்
பெற்றோர்களுக்கு தகவல் அளித்து அவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
பெற்றோரிடம் பள்ளியில் நடந்த விபரங்களை எடுத்துக்கூறிய தலைமை ஆசிரியை மற்ற
மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மது அருந்திய அனைத்து
மாணவிகளையும் பள்ளியில் இருந்து நீக்குவதாகக் கூறி அவர்களின் டி.சியை
பெற்றோர்களிடம் வழங்கினார். இதில் 4 மாணவிகளின் பெற்றோர்கள் டி.சி.யை
பெற்று சென்றுள்ளதாவும், மீதமுள்ள 3 மாணவிகளின் பெற்றோர் டி.சியை பெற்று
செல்ல வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அறிந்த சக
மாணவிகளின் பெற்றோர்கள், பள்ளி மாணவிகளுக்கு மது எங்கிருந்து வந்தது,
அவர்களுக்கு மது வாங்கி கொடுத்தவர்கள் யார்? என்ற விசாரணை நடத்தி
எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
HM siruku paarattukal.....
ReplyDeleteDedicated HM .congratulations.
ReplyDeleteDedicated HM .congratulations.
ReplyDeleteVery good...Students...Nalla Kudimakan kalaga iruntha intha nattil nalla kudimagalkalum uruvagi ullarkal.. Valthukal,, Dr. A.P.J Kalam, Thanthai Periyar, Kamarasar Pondrorkalin Kanavukal Nenaivagi Ullathu..Avarkalin Athumakkal santi Adaium.. Valga Bharatham..Uyarka Kudimakkal..Ithu Pontra Palveru Brand Kalai Vangi Kudithu Matravarkalukkum Koduthu Avarkalin Valkaium Selikka Neengal Ayarathu Padu Padavendum...Pothu Ennidam Valtha Varthai illai..innum pesinal enakku bad Word Vanthuvidum...All is well...God would Save Our People.
ReplyDeletevalthukkal HM
ReplyDeletetrue
ReplyDelete