Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5/11/2016* காலக் கெடுவை நோக்கி கானல் நீர் ஆசிரியர்கள்...

2016 நவம்பர் மாதம் இதே நாள்...
இதே நேரம்... பணியில் உள்ள 3000 பட்டதாரி ஆசிரியர்களின் பணியும் , வாழ்க்கையும் கேள்விக்குறி..???
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 23/08/2010 ற்குப் பிறகு பணி நியமனம் பெற்றவர்கள் நிலை இது.
மிக மனம் வருந்தும் நிலை இதில் யாதெனில் இவர்கள் தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரை குத்தப்பட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் என்பது வெளிச்சம்.
23/08/2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்த இவர்கள் தகுதியற்றவர்கள் என எப்படி நிரூபிக்க உள்ளது?
இவர்களில்
பணியில் சேர்ந்த நாள் முதல்  இன்று வரை மாணாக்கர்களின் படிப்பு, நலன், அக்கறை, முன்னேற்றம், தேர்ச்சி, ஒழுக்கம், அணுகுமுறை.... போன்றவைகளில் எத்தனை ஆசிரியர்கள் மீது தவறு கண்டறியப்பட்டுள்ளது?
கற்பித்தலுடன் சேர்த்து
அரசு அவ்வப்போது கொடுக்கும் பணியிடைப் பயிற்சிகள் முலம் மாணாக்கர்களுக்கு தேவையானவற்றை மிகுந்த உற்சாகத்துடனும் சுணக்கம் இன்றியும் போதிக்கவில்லை என நிரூபிக்க அரசு என்ன செய்ய உள்ளது?
அ முதல் ஃ வரை...
கல்வி மற்றும் பள்ளி சார்ந்த  அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து தேர்ச்சி சதவீதமும் உயர்த்தி கடந்த 4 முதல் 6 ஆண்டுகளாக பணியில் உள்ள இந்த ஆசிரியர்கள் அடுத்த வருடம் நவம்பர் மாதம் இதே நாளில் ஆசிரியர் தகுதித் தேர்வை காரணம் காட்டி தகுதியற்ற ஆசிரியர்கள் என முத்திரைகுத்தி வெளியேற்றிவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என யோசிக்க இன்றுவரை யாரும் இல்லை.
கடந்த 2 ½ ஆண்டில் பல சட்ட சிக்கல்கள் விளைவாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை. இனி நடப்பதற்கு சாத்தியமான சூழலும் , தெளிவான பாதையும் மங்கிய நிலையில் உள்ளன..
இந்த ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு இல்லாமலும், ஒரு சிலர் ஊதியம் இல்லாமலும், வளரூதியம், ஊக்க ஊதியம் இல்லாமலும், தகுதி காண் பருவம் முடிக்க அனுமதி இல்லாமலும், விடுப்பு பலன்கள் கிடைக்காமலும், தினம் தினம் மிகவும் மன வேதனையில் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களின் நிலை பற்றிய செய்திகள் அவ்வப்போது தொலைக்காட்சி, செய்தித்தாள், மின் ஊடகங்கள் வழியாக வந்தாலும் அதை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கண்டு கொள்வது இல்லை என்பதுடன் ஆறுதல் கூறக் கூட ஆள் இல்லை என்பது அவர்களின் சொல்ல இயலாத துயரம்.
இவ்வளவு காலம் பட்டதாரி ஆசிரியர்களாக சிறப்பாக பணி புரிந்தும் முறையான அங்கீகாரம் இல்லாமல் இன்று வரை பயணிக்கும் இந்த ஆசிரியர்கள் பல வழிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொண்டு தோல்வி மட்டுமே கண்டுள்ளனர்.
3000 குடும்பங்கள்  பாதுகாப்பு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து ஏற்கெனவே ஆசிரியர் பணியில் உள்ளவர்களுக்கு விலக்கு அளித்து ஒரு முடிவினை தமிழக அரசு எடுக்கும் பட்சத்தில் அரசிற்கு கண்டிப்பாக நன்மை தான் விளைவிக்கும்.
இந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிலையை நல் உள்ளத்துடன் பார்க்க முற்பட்டு விரைவில் தீர்வு கண்டால் இனி வரும் நாட்களிலாவது நிம்மதியுடன் ஆசிரியப் பணியை அறப்பணியாக மகிழ்ச்சியுடன் செய்வார்கள்.
இப்படிக்கு,
-- தென்னக கல்விக் குழு.
ஆக்கம்: ஆ.சந்துரு,




12 Comments:

  1. unmaiyel arargal thaguthi ullavargalaga erunthal TET ku varuthapadamattargal....podumana alavu time kuduthu than TET pass panna solli erukanga.. pass panna mudilayana valvatharam onrum aagathu... neraya private palligal ullana. therimayana asirigargal thaney,,,, no problem.

    ReplyDelete
    Replies
    1. வேலைக்கு சேர்ந்த பிறகு G.O போட்டு பாஸ் பண்ணு சொண்ணா என்ன அர்த்தம் பெரிய மயிரு மாதிரி பேசர என் நிலைமையில் இருந்து பாருடா

      Delete
    2. நீ என்ன எல்லாம் தெரிந்த ஏகம்பரமா .தமிழ் நாட்டிற்கு தேவையில்லாத ஓன்று இந்த தகுதி தேர்வு தெரியுமா உனக்கு பீகார் போன்ற மாநிலத்தில் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு தான் இந்த தேர்வு தேவை .முதலில் உனது உண்மையான பெயரில் வந்து கமெண்ட்ஸ் செய்யவும்

      Delete
    3. Aada theriyathavanuku theru koonal......ayo ayo...

      Delete
    4. Mr.Murugan.... muthalil neengal asiriyar endru sonnal entha madiriyana mariyathai ellatha varthigalai payanpaduthuvathu ungalin yealamaiyaium panbuellatha thanmaiyaum kattugaruthu.... athai matra muyarchi seiungul...

      Delete
  2. சந்துரு அவர்களே உங்களை எப்படி தொடர்பு கொள்வது

    ReplyDelete
  3. நானும் அதே அரசானையால் பாதிக்கப்பட்டு பின் தகுதி தேர்ச்சி பெற்று பணியை உறுதி செய்துகொண்டேன்

    ReplyDelete
  4. 3000 பேருக்கு தளர்வு ஆணை பிறபிக்க வழி பன்னினால் தானே
    இக்குடும்பங்களின் வாழ்வாதாரம்
    நீடிக்க வழி வகுக்கும்....

    ReplyDelete
  5. Tamil nadu post man exam. 2015 answerkey not downloading official web site. please publish at padasalai

    ReplyDelete
  6. Ellam nallathey nadakkum..!

    ReplyDelete
  7. Hi friends i am a sec tr,I finished my msc bed computer science I have incentive or not,pls anybody knows tel me

    ReplyDelete
  8. Hi friends i am a sec tr,I finished my msc bed computer science I have incentive or not,pls anybody knows tel me

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive