வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம்,
உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
வாரத்தில்
மூன்று அரை நாட்கள் பணி, மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த
ஆண்டு நவம்பர் முதல் ரூ.2 ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மூன்று
நாட்கள் பணி என்பதை ஐந்து நாட்கள் முழுநேர பணி, மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம்
வழங்க வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது: வாரத்தில் 5 நாட்கள்
வேலைக்கு வருகிறோம். ரூ.10 ஆயிரம் சம்பளம் தாருங்கள் என அரசிடம்
கேட்டுள்ளோம். ஒரு சில வாரங்களில் இதற்கான முடிவு எட்டப்படும், என
அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.
சமீபத்தில் ஜாக்டோ சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது,
பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் பணியாற்றினர். அரசுக்கு ஆதரவாக, எந்த
நிலையிலும் வேலை பார்க்க தயார் என அறிவித்தோம். ஆனால், அரசு எங்களுக்கு
சம்பள உயர்வு அளிக்க தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.
பகுதி நேர ஆசிரியர்களுக்குரிய சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக
வரவு வைக்கப்படும் என கூறப்பட்டது. பழைய முறையில், தலைமை ஆசிரியர் மூலமே
வழங்கப்படுகிறது. தற்போது பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில்
பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கியதால், ஆண்கள் ஏற்கனவே பணியாற்றிய
இடத்திலிருந்து கூடுதலாக 100 கி.மீ., அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே
பொதுப்பிரிவு கவுன்சிலிங்கை மறுபடியும் வைக்க வேண்டும், என்றார்.
அம்மாகிட்டதானே கேட்கிறீங்க. 15,000 கேளுங்க. பணி நிரவலுக்குப் பிறகு பள்ளி தூரம் அதிகமாகி பஸ் செலவு அதிகமாயிடுச்சி. மேமாசம் வேற சம்பளம் இல்லை.
ReplyDeleteGood request...
ReplyDeleteபகுதிநேர சிறப்பாசிரியர்களே! பெரும்பலான பள்ளிகளில் வாரம் முழுவதும்தான் நம்மை வேலை வாங்குகிறார்கள். என்னமோ புதுசா வாரத்தில் மூன்று-அரை நாட்கள் மட்டும் வேலை செய்வது போல சொல்கிறீர்கள்?
ReplyDeleteசம்பளமே இல்லாத ''மே''மாதத்திலும் நாங்க பள்ளிப் பணிகள் (விலையில்லா பொருட்கள் மாணவர்களுக்கு) செய்வது யாருக்குமே தெரியாதா?
நீங்க எதிர்பாக்குற 10000 ரூபா போதுமா குடும்பம் நடத்த? இப்போ இருக்கும் விலைவாசியில் 10000 வெச்சு என்ன பண்ணமுடியும்? அரை நாள் ஆசிரியர் என்றால் திருமணம் செய்துகொள்ளாமல் 30 வயதுவரை ஓட்டிரலாம் அப்புறோம் என்ன பண்ணுறது? முழுநேரம் ஆக்குக்குங்கல்னு கேட்க ஏன் உங்களுக்கு தகுதி இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது? ஏகனவே 4வருசம் ஓடிருச்சு.. இனியும் 10000 கொடுங்க போதும்னு தயவுசெஞ்சு கேட்காதீங்க. அதுக்கு 7000 போதும்.. காலம் போயிரும்.. அப்புறம் இப்டியே பழகிரும்..
ReplyDeleteWhat Said by Mr. Thangadurai Sir very correct 10,000/- is not enough to run a month. try to increase the demand amount.
ReplyDeleteBy V.L. Geetha
உங்களுக்கு பள்ளி பக்கத்துல இருக்குன்னு நினைக்குரேன் அதான் இது போதும்னு நினைக்குறீங்க.
ReplyDeleteI have traveling home to school up and down 250 km so quickly contact general Counselling. I think we need only job permanent. already 4 years completed .
ReplyDeleteThangadurai sir sonadhu 100% correct ... 7th pay commisin vantha regular staff vangra salaryda compare pannina indha salarylam oru vishayame illa so aim more benifits
ReplyDeleteமுதலில் இந்த விஷயம் உண்மையா?
ReplyDeleteதமிழகத்தின் முதல்வர் அவர்களோ, அமைச்சரோ, துறை செயலரோ, யாரும் இது பற்றி சொல்லவில்லை.
பொய்யான வதந்திகளை பரப்பி, பகுதிநேர சிறப்பாசிரியர்களை அடிக்கடி ஏமாற்றுவதையே ஒரு கூட்டம் திறம்பட செய்து கொண்டிருக்கிறது. அதுவும் நான்காவது ஆண்டாக இந்த மோசடி தொடர்கிறது.
வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு பரிதவித்து நிற்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை நோக அடித்து வேடிக்கை பார்ப்பதில் இவர்களுக்கு இப்படி ஒரு குரூர மகிழ்ச்சியா?
அரசு வேலை என்று நம்பி இருந்த வேலையை தொலைத்துவிட்டு வீதியில் நிற்கும் பகுதிநேர சிறப்பாசிரியர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் உள்ளது.
(பின்குறிப்பு; பகுதிநேர சிறப்பாசிரியர்களே நான் உங்களை கிண்டல் செய்யவில்லை. எனது கோபத்தைதான் பதிவு செய்தேன்)
Ug-trb special teacher exam eppo? Tell me sir.
ReplyDeleteசரவணன் சார், சிறப்பாசிரியர்களின் தகுதித்தேர்வில் பல்வேறு உச்சகட்ட நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது. தேர்வு வாரியத்தின் அறிவிப்பு வந்ததும் அடுத்த வேதனைக்கு தயார்படுத்திக்குங்க.
Deleteஆமாம் தெரியாமத்தான் கேட்கிறேன், செத்தவனுக்கு ஏம்பா, ஜோசியம் பார்க்குரீங்க
சிறப்பாசிரியர் நியமனம் பற்றிய சென்னை மற்றும் மதுரை நீதி மன்றத்தில் வழக்கு உள்ளதால் இப்போதைக்கு தேர்வு என்பது கிடையாது
DeleteCourt ordered to conduct exam. No cases in court.
DeleteEnakkum theriyatu sir.what is the reason for the not conducted the exam ?.
ReplyDeleteSir. Tell the you phone number.i call sir
ReplyDeleteவாழ்க்கையை தொலைத்துகனவுகளுடன் வறுமையில் வாடி ஏழையான பரிதாபத்திற்குரிய பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய இந்த ஆட்சியாளர்களால் முடியாதா? ஆசிரியர் சமூகத்திலேயே வறுமை கொண்டு வாழ்கிற ஆசிரியர்கள். எப்பொழுதுதான் விடிவுகாலம் பிறக்குமோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!
ReplyDeleteValakkaiyai tholaithu varumail vadum padithu pattam petru pakuthi nera asiriyar velai kuda kidaikkamal thavikkum engalukku uthava entha arasal mudiuma?
ReplyDeleteOh my god!!!!
பணி நிரவலுக்குப் பிறகு பள்ளி தூரம் அதிகமாகி பஸ் செலவு அதிகமாயிடுச்சி.
ReplyDelete