பிரதமரின்
தொழில்கல்வி உதவித்தொகை பெற விரும்பும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள்
நவ.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர்
எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
பொறியியல்,
மருத்துவம் போன்ற தொழில்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள்
பாரத பிரதமரின் தொழில்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை விண்ணப்ப
படிவத்திலும், இணையதளம் மூலமாகவும் இரு வழிகளிலும் கண்டிப்பாக விண்ணப்பிக்க
வேண்டும் என மத்திய முன்னாள் படைவீரர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே தொழில்கல்வி
பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் ஜ்ஜ்ஜ்.க்ங்ள்ஜ்.ஞ்ர்ஸ்.ண்ய்
என்ற இணையதளத்தில் உள்ள பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்து முழுவதுமாக பூர்த்தி செய்து நவ.25-ம் தேதிக்குள்
முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் இணையதள
போர்டல் மூலமாக விண்ணப்பிக்க உரிய கால அவகாசம் பின்னர் அறிவிக்கப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.25-ம் தேதிக்கு பின்னர் பூர்த்தி செய்து
சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில்
எக்காரணத்தை கொண்டும் பெறப்படமாட்டாது.
பிரதமரின் கல்வி
உதவித்தொகை பெற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க www.desw.gov.in என்ற இணையதள
முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் தேவைப்படுபவர்கள் ஈரோடு
மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ
0424-2263227 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...