மின் வாரியத்தில், புதிதாக, 1,950 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுதொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மின்
வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன.
இதையடுத்து, 1,950 காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப முடிவு
செய்யப்பட்டுள்ளது.
புதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான, நிதி ஒதுக்கீடு குறித்து, உயர்
அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தற்போது, அந்தப் பணியும் முடிவடைந்ததால்,
ஊழியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது.
இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உதவி பொறியாளர், தொழில்நுட்ப
உதவியாளர், இளநிலை உதவியாளர் என, 1,950 பணியிடங்கள் விரைவில்
நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு, தீபாவளி முடிந்த, 10 நாளில்
வெளியிடப்படும். 2016 மார்ச்சில், ஊழியர்கள் தேர்வு முடிக்கப்பட்டு விடும்'
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...