'ரயில்களில் பயணிக்கும்போது, பயணிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இலவச எண்ணான '182'ஐ அழைத்தால், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உதவுவார்கள்'' என அதன் கமிஷனர் சங்கர்குட்டி தெரிவித்தார்.தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு போன்ற வெடிபொருட்களை ரயில்களில் கொண்டு வரக்கூடாது என, மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தடையை மீறி ரயில், ரயில்வே இடத்திற்கு கொண்டு வந்தால் ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164ன்படி, கைது செய்யப்படுவர். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். ரயில்கள் ஓடும்போது, கல்லெறி சம்பவங்கள் நடக்கின்றன. எந்த இடத்தில் சம்பவம் நடந்தது என்பதை கண்டறிந்து, அங்கு 'மப்டி'யில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். குற்றவாளியை நாங்கள் பிடிக்கும்பட்சத்தில், ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கிறோம்.
ரயில்களில் பயணிக்கும் போது, பயணிகளுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், இலவச எண்ணான '182'ஐ அழைக்கலாம். உடனடியாக அருகில் உள்ள ஸ்டேஷனில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வந்து உதவுவார்கள், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...