தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அதேபோன்று அரசு அலுவலக ஒன்றியம் சார்பில் மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் ஜெயக்கொடி ஆகியோரும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...