உதவி
வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 18-ம் தேதி
நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு முதல்கட்டமாக
ஆகஸ்ட் 19-ம் தேதியும் 2-வது கட்டமாக அக்டோபர் 1-ம் தேதியும் நடைபெற்றன.
இந்த நிலையில், உதவி வேளாண் அலுவலர் பணிக் கான நேர்முகத்தேர்வு நவம்பர் 2 முதல் 7-ம் தேதி வரை நடை பெற உள்ளது. இதற்கு அனு மதிக்கப்பட்ட விண்ணப்பதாரர் களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) நேற்று வெளி யிடப்பட்டது.நேர்முகத்தேர்வு குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...