புதுச்சேரி: சைனிக் பள்ளியில் சேர நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்
வழங்கப்படுகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் குமார்விடுத்துள்ள
வழங்கப்படுகிறது. புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்குனர் குமார்விடுத்துள்ள
செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம்
உடுமலைப் பேட்டை சைக்னிக் பள்ளியில் 2016-17 கல்வி ஆண்டில் ஆறு மற்றும்
ஒன்பதாம் வகுப்பில் மாணவர் சேர்க்க அகில இந்திய நுழைவுத் தேர்வு வரும் ஜன.,
3ம் தேதி புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்,
உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு- 642 102. என்ற
முகவரியில் நவம்பர் மாதம் 30ம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம். 6ம்
வகுப்பில் சேர 10 வயது முடிந்தும், 11 வயது முடியாமலும் அதாவது ஜூலை 2002
-லிருந்து 2003 ஜூலை 1ம் தேதிக்குள் பிறந்த மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க
முடியும். ஒன்பதாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்க 13 வயது முடிந்தும் 14 வயது
முடியாமலும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளியில் 8 ம்
வகுப்பு படிக்கும் மாணவன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்த
விண்ணப்பங்கள் சைனிக் பள்ளியில் டிச., 4ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.
தேர்வாகும் மாணவர் களுக்கு புதுச்சேரி அரசு கல்வி உதவித்தொகை வழங்கும்.
மேலும் விபரங்களுக்கு 04252-256246, 256296 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு
கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...