திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெறும் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்டம் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது.
அதன்பிறகு தேரை புதுப்பிக்க முடிவெடுத்து 2 கோடியே 18 லட்ச ரூபாய் செலவில் ஆழிதேர் மற்றும் சுப்பிரமணியர் சுவாமி தேர் ஆகிய இரண்டு தேர்கள் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஆழித்தேரின் வெள்ளோட்டம் இன்றைய தினம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் சாலைகள் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது.சிவன் கோயிலுக்கே உரிய உத்தமதாளம் எனப்படும் 10 தாள அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள ஆழித்தேர் 3 நிலைகளை தாண்டி பீடமும், அதற்கு மேல் விதானத்தில் புராண கதைகளை கூறும் வகையில் கலங்காரி எனப்படும் துணி ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான நான்கு வெளிப்புற சக்கரங்கள், சிறிய சக்கரங்களை உள்ளடக்கி அமைந்துள்ளது. வெள்ளோட்டத்தை ஒட்டி வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் திருவாரூர் தேரைப் பார்வையிட வந்துள்ளனர்.கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு திருவாரூரில் நடைபெறும் பெரிய திருவிழா என்பதால் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...