பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறையும் பாட ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் மோகனசந்திரன், மாவட்ட கல்வி ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தது.
இதில், முதன்மை கல்வி அலுவலர் சீதாலட்சுமி பேசியதாவது:வரும், அரசு பொதுத்தேர்வில், மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி அளிக்க வேண்டும். பொதுத்தேர்வில், மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறைந்தால், சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Pavam aasiryargal
ReplyDelete