நாகர்கோவிலில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, போதை ஊசி சப்ளை செய்த மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி
பேருந்து நிலையம், பள்ளிவிளை ரயில் நிலையம் மற்றும் கிருஷ்ணன்கோவில்
பகுதிகளில், ஒரு கும்பல், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு போதை மருந்தும்,
தொழிலாளர்களுக்கு கஞ்சாவும் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல்
கிடைத்தது.
இதுகுறித்து, வடசேரி போலீசார் கண்காணித்து வந்த
நிலையில், நேற்று காலை, பள்ளிவிளை ரயில் நிலைய சாலையில், நீண்ட நேரமாக
ஆட்டோவில் அமர்ந்திருந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அதில்,
கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 30 வயது முதல், 35 வயது
உடையவர்கள் என, தெரியவந்தது. அக்கும்பலிடம் இருந்து, ஆறு பாட்டில் போதை
மருந்து, 1.100 கிலோ கஞ்சா பொட்டலம், போதை மருந்தை செலுத்துவதற்கான ஊசிகள்
ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். போதை மருந்தை குறைந்த விலைக்கு
வாங்கி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 300 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை
செய்தது தெரிய வந்தது.
மூவரில், 35 வயதுள்ளவன், போதை மருந்து விற்பனை
வழக்கில், ஏற்கனவே கைதானவன் என்பதும், சில நாட்களுக்கு முன், அவன் சிறையில்
இருந்து வெளியே வந்தவன் என்பதையும், போலீசார் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது
செய்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...