செக்கோஸ்லாவாகியா நாட்டின் ப்ர்னோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலமாக வாட்ஸ்அப்பில் ரகசியமான முறையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குறிப்புக்கள் எங்கேயோ உள்ள அதன் கணிப்பொறிகளில் பதிவு செய்யப்படும் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என அச்சுறுத்தும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது.இந்தக் கணிப்பொறிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், இது ஒருவேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், நம்மைப் பற்றிய விவரங்கள் வெளியேறாமல் இருக்க ஆண்ட்ராய்டு போன்களிலிருந்து வாட்ஸ்அப் சர்வர்களில் சேமிக்கப்படும்போது, ரகசிய மொழியாக மாற்றி பாதுகாக்க ஒரு பிரத்யேக டூலை இந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆகவே, இந்த தகவல்களை தெரிந்துகொள்ள இந்த சாதனத்துடன், முழு நெட்வொர்க் டிராபிக்கும் தேவை எனவும் இந்த ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எனவே இப்போதைக்கு வாட்ஸ்அப் குறிப்புகள் பத்திரமாகவே உள்ளது. இதுதவிர இருக்கும் பல்வேறு சமூக தளங்களையும் ஆய்வு செய்தால்தான் அதன் நிலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...