கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை ஆணை வழங்குவது தொடர்பான சிறப்புக் கூட்ட அமர்வு செவ்வாய்க்கிழமை(அக்.13) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இம்மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்தலுக்கான ஆணை வழங்குதல், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆணை வழங்குதல் தொடர்பான சிறப்பு கூட்டமர்வு அந்தந்த கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.குழித்துறை கல்வி மாவட்டத்துக்கு மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது.
தக்கலைகல்வி மாவட்டத்துக்கு தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.14 ஆம் தேதியும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்துக்கு எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் அக்.15ஆம் தேதி காலை 10 மணிக்கு கூட்டமர்வு நடைபெறும்.அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் உரிய படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்து இணைப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...