ஊதியம், இதர படிகளைத் தீர்மானிப்பதில் தங்களுக்கே இறுதி முடிவு
எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி
வழங்குமாறு, மத்திய அரசிடம் எம்.பி.க்கள் ஊதியத்துக்கான நாடாளுமன்றக் குழு
பரிந்துரைத்திருந்தது. அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சிக் கொறடாக்களின் தேசிய மாநாடு
அண்மையில் நடைபெற்றது.
அதில், எம்.பி.க்களின் ஊதியத்தை மாற்றியமைக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு பரிந்துரைந்தது.
இதனிடையே, பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையிலான எம்.பி.க்கள் ஊதியத்துக்கான நாடாளுமன்ற குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் பங்கேற்ற எம்.பி.க்கள் பலரும் ஊதியத்தை தீர்மானிப்பதில் இறுதி
முடிவை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கே இருக்க வேண்டும் எனக் கூறியதாகத்
தெரிகிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத எம்.பி. ஒருவர்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எம்.பி.க்களின் ஊதியத்தை தீர்மானிப்பதற்காக தனிக் குழுவை அரசு
அமைத்ததில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அதேவேளையில், அந்தக் குழுவானது
எம்.பி.க்கள் ஊதியத்துக்கான நாடாளுமன்றக் குழுவின் அதிகாரத்தை நீர்த்துப்
போக செய்யும் வகையில் இருக்கக் கூடாது.
நாடாளுமன்றக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய அரசு அமைத்துள்ள மூன்று நபர் குழு செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...