Home »
» கிஷோர் வைக்யானிக் பிரோட்சகன் யோஜனா
கல்வித்தகுதி
அறிவியல்:
* பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க
வேண்டும். பிளஸ் 2வில் அறிவியல் பாடத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
* பிளஸ் 2 அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்
பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் அறிவியல் பாடத்தை
தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
* சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் நடப்பு ஆண்டில் இந்தியா சார்பாக
கலந்து கொண்டவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவர்.
பொறியியல்:
* இரண்டாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., படிப்பை முடித்தவர்; இரண்டு
ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;
ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.
மருத்துவம்:
* இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்., படிப்பை
முடித்தவர்; இரண்டு ஆண்டுகளிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். ஆராய்ச்சியில் ஈடுபாடு இருக்க வேண்டும்.
எண்ணிக்கை:
அறிவியல்: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை; பிளஸ் 2
தேர்ச்சி பெற்றவர்களுக்கு 60 வரை
பொறியியல்: 25 வரை
மருத்துவம்: 25 வரை
காலம்:
அறிவியல்: பிளஸ் 1 வகுப்பு/எம்.எஸ்சி., படிப்பு வரையிலானவை
பொறியியல்: மூன்றாம் ஆண்டு பி.இ.,/பி.டெக்., முதல் எம்.இ.,/எம்.டெக்.,
முடிக்கும் வரை
மருத்துவம்: மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.,/பி.வி.எஸ்சி.,/பி.டி.எஸ்.,
முதல் இப்படிப்பை முடிக்கும் வரை
மதிப்பு:
அறிவியல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 - மாதம் 4000/- ரூபாய்;
இளநிலை : மாதம் 5000/- ரூபாய்
முதுநிலை - மாதம் 7000/- ரூபாய்
விண்ணப்பிக்கும் முறை: உரிய விண்ணப்ப படிவத்தில் ஆசிரியரின் பரிந்துரையுடன்
விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சி
திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
தேர்வு முறை: அறிவியல் பிரிவில் திறன்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொறியியல் மற்றும் மருத்துவ
பிரிவில் ஆராய்ச்சி திட்ட செயல்பாடு மற்றும் நேர்முகத் தேர்வு
அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அறிவிப்பு மற்றும் கடைசிதேதி: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை/ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு
வெளியாகும்.
உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய தேசிய அறிவியல் அகடமி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...