உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய
கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட்
பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90
அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது.
இது தான், நாட்டின்
மிக உயரமான கொடிக் கம்பத்தில் பறக்க விடப்படும், பெரிய தேசியக் கொடி என்ற
பெருமையை பெற்றுள்ளது.இந்த சாதனையை, உ.பி.,யிலும் தொடர, முதல்வர் அகிலேஷ்
யாதவ் முயற்சி மேற்கொண்டுள்ளார். தலைநகர் லக்னோவில் உள்ள பூங்கா
ஒன்றில், 207 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
அதில்,
கன்னாட் பிளேசில் பறக்க விடப்படும் அளவிலான தேசியக் கொடி, விரைவில்
பறக்கவிடப்பட உள்ளது.அகிலேஷ் யாதவ் தந்தையும், சமாஜ்வாதி தலைவருமான
முலாயம் சிங் யாதவின் பிறந்த நாளான, நவ., 22ல், 207 அடி உயர கம்பத்தில்,
பிரம்மாண்ட தேசியக் கொடி பறக்க விடப்பட உள்ளது.'தேசியக் கொடி ஏற்றுவதற்கான
விதிமுறைகளின் படி, இரவில் கொடியை பறக்கவிடக் கூடாது. ஆனால், இந்த
பிரம்மாண்ட கொடிக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது. எனவே, இரவு, பகலாக
தொடர்ந்து பட்டொளி வீசி இந்தக் கொடி பறக்கும்' என, உ.பி., மாநில அதிகாரி
கள் தெரிவித்துள்ளனர்.
யார் எவ்வளவு பெரிய கொடியை பறக்க விடுகிறார்கள் என்பது தேச பக்தியல்ல. யார் எந்த அளவில் தேசியக்கொடிக்கு மதிப்பளிக்கிறார்கள் என்பதில்தான் உள்ளது நாட்டுப்பற்று... சாதியை, மதத்தை, மொழியை கடந்து இந்தியன் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்திட அரசு முனைய வேண்டும.
ReplyDelete