ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக
வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே
தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக
திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30
ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன்
கடைகளுக்கு நகர்வு செய்கிறது. ஆனால், வாணிப கழகம் குறித்த காலத்தில்,
பருப்பு வகைகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதால், ரேஷன் கடைகளில்,
தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண, சென்னை தலைமை
செயலகத்தில், கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டம், நேற்று
நடந்தது.
இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர்
கூறியதாவது:நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும், 1,200 ரேஷன் கடைகளுக்கு
மட்டும், முழு அளவில் பொருட்கள் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கம்
நடத்தும் ரேஷன் கடைகளுக்கு, ஒவ்வொரு மாதமும், 60 சதவீத பொருட்கள் தான்
வழங்கப்படுகின்றன.
எனவே, வாணிப கழக அதிகாரிகள் பருப்பு, பாமாயில் அளவை குறைத்து வழங்கினால்,
அந்த விவரத்தை ரேஷன் கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டர், கூட்டுறவு மண்டல இணை
பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க
உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...