இ - சேவை மைய சாப்ட்வேரில், சில ஜாதிகளின் பெயர் பிழையாக இருப்பதால், ஜாதிச்சான்று பெறுவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜாதி, வருமானம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற, தாலுகா
அலுவலகங்களில் மக்கள், காத்து கிடக்க வேண்டிய நிலைமை இருந்தது. அதை
தவிர்க்க, பொது சேவை மையம் எனப்படும், இ - சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
சான்றிதழ் தேவைப்படுவோர், இவற்றின் மூலம், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க
வேண்டும். இங்கிருந்து, சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு, அந்த
விண்ணப்ப விபரம் அனுப்பப்படும். அங்கு, அவை சரிபார்க்கப்பட்டு, சான்றிதழ்
தயார் செய்யப்பட்டு, சேவை மையத்துக்கு வந்து சேரும். அல்லது, சம்பந்தப்பட்ட
நபருக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
இது, நடைமுறைக்கு வந்த பின், தாலுகா அலுவலகங்களில், நேரடியாக சான்றிதழ்கள் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், 10 ஆயிரத்துக்கும் அதிகமான, இ - சேவை மையங்களில்
உள்ள, ஜாதிச் சான்று சாப்ட்வேரில் குளறுபடி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜாதிச் சான்றிதழ் கேட்டு, மனு செய்தவர் விவரங்களை, ஆங்கிலத்தில் தாலுகா
அலுவலகத்துக்கு, பொது சேவை மைய ஊழியர்கள் அனுப்புவது வழக்கம். சாப்ட்வேரில்
உள்ள பிழை காரணமாக, சில ஜாதிகளின் பெயர்களில், எழுத்துப் பிழை இருப்பதாக
புகார் எழுந்துள்ளது.
மேலும், கணவன், மனைவி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால்,
அவர்களின் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ் பெற முடிவதில்லை; காரணம், வெளி
மாநில ஜாதிகள்,
இ - சேவை மைய சாப்ட்வேரில் இடம் பெறவில்லை; தமிழக ஜாதிகளின் பெயர்
மட்டுமே உள்ளன.இதுகுறித்து, தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் கூறியதாவது:இ -
சேவை மைய சாப்ட்வேரில், சில ஜாதிகளின் பெயர்கள் தவறாக இருப்பது உண்மையே.
ஜாதிகளின் பெயர்களை, தேசிய தகவல் மையத்தினர், 'அப்லோட்' செய்யும்போது, சில
பிழைகள் நிகழ்ந்துள்ளன. சரி செய்ய, சாப்ட்வேரை திருத்த வேண்டும்.அதேபோல்,
வெளி மாநிலத்தவர் குழந்தைகளுக்கு சான்றிதழ் தர முடியாத குழப்பம், இப்போது
தான் தெரிய வந்துள்ளது. இதை, அரசு கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
இதுபோன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், தாலுகா அலுவலகத்தை நேரடியாக அணுகலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...