ஜிமெயிலில் சின்னதாகப் பல வசதிகள் உண்டு. இவற்றில் பலவற்றை நீங்கள் கவனிக்காமல்கூட இருக்கலாம். இப்போது இந்தப் பட்டியலில் புதிதாக ஒரு அம்சம் அறிமுகமாகி இருக்கிறது. அது இமெயில்களை பிளாக் செய்யும் வசதி.
ஏதேனும் ஒரு காரணத்திற்காக குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து நீங்கள் இமெயில் பெற விரும்பாவிட்டால், அவரின் மெயிலை வரும் முன் தடுத்துவிடலாம்.இதற்காக மெயிலின் வலப்பக்கத்தில் பதில் அளிக்கும் வசதி அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்தால் வரிசையாக பல அம்சங்களின் பட்டியல் வரும். அதில் உள்ள, பிளாக் செய்யவும் வசதியை தேர்வு செய்தால் இனி அந்த நபரின் இமெயில் உங்கள் இன்பாக்ஸுக்கு வராது. அதற்கு முன்னரே தடுக்கப்பட்டு ஸ்பேம் ஃபோல்டருக்குள் அனுப்பி வைக்கப்படும்.
விளம்பர மெயில் போன்ற தொல்லைகளில் இருந்து தப்பிக்க இந்தவசதி கைகொடுக்கும்.இதற்கு முன்னரும் கூட ஜிமெயிலில் உள்ள வடிகட்டல் வசதியைப் பயன்படுத்தி வேண்டாத மெயில்களைத் தடுக்கலாம். ஆனால் இதை மிக எளிதாக செய்யக்கூடிய வகையில் புதிய அம்சம் அமைந்துள்ளது.
ஆனால் பழைய மெயில்களுக்கு இது பொருந்தாது. புதிதாக வரும் மெயில்களில் இந்த வசதியைத் தேர்வு செய்து இயக்கினால் மட்டுமே பிளாக் செய்வது சாத்தியம். இதே போல ஆண்ட்ராய்டுக்கான ஜிமெயில் செயலியில் இமெயில் சந்தாக்களில் இருந்து விலகிக்கொள்ளும் அம்சமும் அறிமுகமாயிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...