மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் முடிவை கைவிட
வேண்டும் எனமத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது
தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எம்பிபிஎஸ்,
பிடிஎஸ் மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு
பொது நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில்
ஒப்புதல்அளித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக
தெரிவித்துள்ளார்.பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2013 -ம் ஆண்டு உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டதை குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, இதனை எதிர்த்து மனு
தாக்கல் செய்ய கூடாது என பிரதமரைத் தாம் வலியுறுத்தியதாகவும்
கூறியுள்ளார்.ஆனால் தற்போது இந்திய மருத்துவக் கவுன்சில் எடுத்து வரும்
நடவடிக்கைகள் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக
முதலமைச்சர் கூறியுள்ளார். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுக்கு
இணையாக பொதுத் தேர்வில் சிறப்பாகசெயல்பட முடியாது என்பதால், இதனை ரத்து
செய்ய 2005-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்ததாகவும் ஜெயலலிதா
தமது கடிதத்தில் கூறியுள்ளார்.மாணவர் சேர்க்கைக்கான கொள்கை முடிவில்
மத்திய அரசு தலையிடுவது, மாநில அரசின் உரிமைகளை பாதிக்கும் என்றும் அவர்
கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...