காரைக்குடி அருகே கோவிலூரில்
செவ்வாய்க்கிழமை துர்நாற்றம் வீசியதால் அரசு உயர்நிலைப்பள்ளி
மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து திடீர் விடுமுறையளிக்கப்பட்டது.
கோவிலூர் அரசு உயர்நிலைப்பள்ளியின்
பின்புறப்பகுதியில் நீர் தேங்கிக்கிடந்த குட்டை போன்ற பகுதியிலிருந்து
துர்நாற்றம் வீசத்தொடங்கி,பள்ளிவளாகத்திலும் நாற்றம் பரவியது. இதனால்
மாணவர்களால் பாடம் கற்க முடியவில்லை. மாணவர் ஒருவருக்கு வாந்தியும்
ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் மாவட்டக்கல்வி அலுவல ருக்குத்
தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 6-ஆம் வகுப்பிலிருந்து 9-வது வகுப்புவரை
மதியம் விடுமுறை விடப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...