‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி
தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
நடத்தியது.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கை 6-வது
ஊதியஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பளவிகிதங்களில் உள்ள குளறுபடிகளைநீக்க
வேண்டும் என்பது. இதை வைத்துஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட
நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.ஆசிரியர் சங்கங்களின் இந்தப்
போராட்டம்சட்டசபை தேர்தலில் பெரிய அளவில்பாதிப்பை ஏற்படுத்தும் என்று
உளவுத்துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின்கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து தலைமைச்செயலகத்தில்அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையில் தலைமைச்செயலாளர்,நிதித்துறை செயலாளர்,பொதுத்துறை செயலாளர் ஆகியோர் கூடிய அவசர கூட்டம் நடந்தது.இதையடுத்து நிதித் துறைசெயலாளர் சண்முகம் அனைத்து துறைமுதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர்உத்தரவை அவசர அவசரமாக அனுப்பிவைத்தார்.
அதில் 6-வதுஊதியக்குழுவில் என்னென்ன முரண்பாடுகள் இருக்கின்றன. அதைஎப்படி தீர்ப்பது என்று அறிக்கை அளிக்கும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. விரைவில்ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...