நாள்தோறும் நான் பூசனை செய்யும் கோவில் “பள்ளிக்கூடம்”
கோவிலைச் சுற்றிவரும் பக்தர்கள் “பசங்க”
பள்ளியை ஆளவந்த நான் “ஆளவந்தான்”
எனது பள்ளி வாழ்க்கை ஓர் “ஆல்பம்”
குறும்பு செய்யும் மாணவர்களுக்கு நான் “இம்சை அரசன்”
வகுப்பறையைச் சுற்றி வரும் நான் ”ஈ”
அடிப்படையில் ஊதியம் குறைவு என்பதால் என் வாழ்க்கை “மிடில்
கிலாஸ் மாதவன்”
அடிப்படை அறிவைப் புகட்டுவதால் உள்ளத்தால் நான் “பணக்காரன்”
குழந்தைகளோடு விளையாடுவதால் மற்றவர் பார்வைக்கு நான் “படிக்காதவன்”
குழந்தைகளின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ளும் நான் “மேதை”
பள்ளியில் கன்றுகள் வளர்த்து வரும் நான் “தோட்டக்காரன்”
பள்ளியைக் கோவிலாக்கும் நான் “தெய்வப்பிறவி”
குழந்தைகளுக்காகப் பாடும் ஒவ்வொரு வரியும் எனது “அபூர்வ ராகங்கள்”
குழந்தைகளோடு சேர்ந்து பாடும் போது என்னுள் கேட்கும் “ஆனந்த
ராகம்”
வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு நான் “கொடுத்துச்
சிவந்த கை”
வார்த்தைகளால் பேச இயலாத போது எனது கைகள் “துடிக்கும்
கரங்கள்”
பேச்சாற்றலினால் குழந்தைகள் என்னை அழைப்பது “எங்கள் அண்ணா”
அறிவாற்றலால் குழந்தைகள் கூறும் “எங்கள்
ஆசான்”
தீண்டாமைக் களையைக் களைவதால் நானும் ஓர் “பெரியார்”
மதிய உணவை குழந்தைகளோடு பகிர்ந்துண்பதால் நானும் ஓர் “காமராசர்”
மாணவர்கள் ஓட்டுப் போடாமலே பள்ளிக்கு நான் “முதல்வன்”
பள்ளியில் உள்ள ஓட்டையை அடைக்கும் நான் “மாடி வீட்டு மாப்பிள்ளை”
புத்தக மூட்டை சுமக்கும் நான் “சுமைதாங்கி”
விலையில்லாப் பொருள்களை வினியோகிப்பதால் நான் “வள்ளல்”
விலையில்லாப் பொருளையும் விலைகொடுத்து ஏற்றிவரும் நான் “ரிக்ஷாக்காரன்”
முக்காலமும் சுமந்து வருவதால் நான் “ஆட்டோகாரன்”
இவ்வேளைகளைச் செய்ய மறுத்தால் நான் “புரட்சிக்காரன்”
ஊதிய முரண்பாடுகளைக் களைய முரண்படும் எங்கள் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”
ஊதியம் குறைந்தாலும் குறையாத எங்கள் சங்கங்களின் எண்ணிக்கை “49 o+”
மாத ஊதியம் உயராவிட்டாலும் சந்தாத் தொகையை உயர்த்திக் கொடுக்கும் நான் “உயர்ந்த மனிதன்”
அனைத்து சங்கங்களுக்கும் சந்தா செலுத்த “நான் மகான் அல்ல”
சங்கத்தில் சேர மறுத்தால் நான் ஓர் “அந்நியன்”
எங்களில் சிலர் வட்டிக்கு விடுவதில் “வசூல் ராஜா”
பள்ளித் தளவாடங்களைப் பாதுகாப்பதால் நான் “காவல்காரன்”
புரவலர்களிடம் கை கூப்பும் நான் “சுயேட்சை MLA”
மாணவர்களிடம் அன்பு காட்டும் நான் “புன்னகை மன்னன்”
முப்பருவமும் மாணவர் படையைக் கையாளும் நான் “தளபதி”
பல்வகுப்புக் கற்பித்தலில் நான் பத்துத் தலை “இராவணன்”
5 வகுப்புகளுக்கும் நான் ஒருவனே பாடம் நடத்துவது “பஞ்ச தந்திரம்”
5 வகுப்புகளையும் தேர்ச்சி பெற வைக்க நான் வகுப்பது “ராஜ தந்திரம்”
எல்லையில் உள்ள மாணவர்களைக் கண்காணிப்பதில் நான் “இராணுவ
வீரன்”
எல்லையில்லாத் தேர்ச்சி பெற வைப்பது எனது “விதி”
பட்டப் படிப்பு முடித்தும் நான் “வேலையில்லாப் பட்டதாரி”
முதுமையானாலும் மாணவர்களால் மறக்க முடியாத நான் “ஜென்டில் மேன்”
மாணவத் தலைமுறை போற்றும் நான் “வரலாற்று நாயகன்”
எங்களில் சிலர் பள்ளி வேளையில் மறையும் “மாயமான்கள்”
மாயமான்களைக் கண்டறிய அதிகாரியிடும்
கட்டளை “வேட்டையாடு விளையாடு”
வேட்டையில் சிக்கிய மான்கள் கேட்பது “பாவ
மன்னிப்பு”
சத்துணவைப் பார்வையிடும் நான் “சர்வர்
சுந்தரம்”
மாணவர்களைப் பாதுகாப்பதில் நான் “பரமசிவன்”
கற்பித்தலே எனது தொழிலாதலால் நானும் ஓர் “தொழிலாளி”
ஓய்வுவேளை என்பதே எங்கள் துறையில் இல்லாததால் நானும் ஓர் “உளைப்பாளி”
கல்விக்கு ஒளி ஏற்றுவதால் நான் “ஆதவன்”
SABL முறையில் பாடம் எடுப்பதால் நானும் ஓர் “கஜினி”
SABL முறையில் மாணவர்களை வெற்றி பெறச் செய்வதில் நானும் ஓர் “சிவாஜி”
காலை வழிபாட்டுக் கூட்டத்தில் நான் கூறுபவை(GO 264) யாவும் “அரச கட்டளை”
ஆடிப்பாடி நடிப்பதால் நானும் ஓர் “அவ்வை சண்முகி”
பள்ளிக்குள் நுழைந்ததும் “சின்ன பசங்க நாங்க”
எழுத்தறியாக் குழந்தைக்கும் எழுதுகோல் வழங்கும் நான் “தர்மத்தின் தலைவன்”
எல்லா மாணவரும் கைகூப்பித் தொழுவதால் நானும் ஓர் “எஜமான்”
உத்தரவுகளை உடனே நிறைவேற்றும் நான் “எந்திரன்”
உண்மையைச் சொல்லித் தரும் நான் “உத்தம புத்திரன்”
குழந்தைகள் என்னைப் பின்பற்றுவதால் நான் “குரு”
குழந்தைகள் சுற்றிவரும் என் வாகனம் “மோட்டார் சுந்தரம் பிள்ளை”
மதிய உணவிற்கு முன் என்னுள் கேட்கும் “மௌனராகம்”
நன்மை விதைக்கும் நான் “நல்லவனுக்கு
நல்லவன்”
மாணவர்களுக்காக நான் “நினைத்ததை முடிப்பவன்”
கல்லாமைக் கள்வனை விரட்ட வந்த நான் “ஊர்க்காவலன்”
குழந்தைகளிடம் நான் காட்டும் அன்பு “பாசமலர்”
குழந்தைகளுக்காக நான் எழுதும் பாடக்குறிப்பு “பொக்கிஷம்”
SABL வானிலே பறக்கும் நான் “புதிய பறவை”
SABL ல் நான் விதைக்கும் விதை “புது
நெல்லு புது நாத்து”
நான் எழுதும் உண் மை “ரெட்”
நான் கற்றுத்தரும் விளையாட்டு “சதுரங்கம்”
நான் எழுதும் கோப்புகள் “வரலாறு”
நான் கூறும் கவிதை “செந்தமிழ்
பாட்டு”
நான் கட்டமைத்த கல்விக்கூடம் “தாஜ்மஹால்”
வருங்கால இந்தியாவை உருவாக்கும் நான் “வல்லரசு”
வருந்தாமல் ஒலிக்கும் என் குரல் “சலங்கை ஒலி”
அயர்ந்தவனுக்கு நான் கூறும் அறிவுரை “தூங்காதே தம்பி தூங்காதே”
அயராமல் உழைப்பதால் என் முதுகில் தெரியும் “மூன்றாம் பிறை”
அதிகாரி வந்தால் என் உள்ளத்தில் கேட்கும் “டிக் டிக் டிக்”
வந்தவர் சென்றால் பள்ளியில் ஒலிக்கும் “டும் டும் டும்”
4.10 க்குத் தெரியும் எங்களது “கடமை கண்ணியம் கட்டுப்பாடு”
மாணவர்கள் சுற்றிவரும் நான் “திருவண்ணாமலை”
களப்பணியாற்றுவதில் நான் “நாடோடி மன்னன்”
படி நிலையில் உச்சிக்குக் கொண்டு செல்லும் நான் “ஏணிப்படிகள்”
வெற்றிக் கோப்பையில் விளக்கேற்றும் நான் “பட்டணத்து பூதம்”
நான் அமைத்த கம்பிப் பந்தல் “சிலந்தி வலை”
நம்பிக்கை இழந்தோருக்கு நான் சொல்வேன் “உன்னால் முடியும் தம்பி”
நான் சுழற்றும் ஆரோக்கியத்திற்கான “தர்மச் சக்கரம்”
என் வேலைகளை பகிர ஒருவரும் இல்லையாதலால் “நானே ராஜா நானே மந்திரி”
ஔவையார் அட்டை எடுத்தால் நான் “பாட்டு வாத்தியார்”
நான் பெறும் பணியிடைப்பயிற்சி “மீண்டும் கோகிலா”
நான் பதிக்கும் எழுத்துக்கள் “சிவகாசி”
நான் உதிர்க்கும் சொல்லமுதம் “திருநெல்வேலி”
என் வார்த்தைகளின் கூர்மை “திருப்பாச்சி”
என் சொற்கலவைகள் “திருப்பதி”
நான் 5 வகுப்புகளிலும் கலந்த “பஞ்சாமிர்தம்”
ஐந்து வகுப்புக்கும் அவதரித்த நான் “தனி ஒருவன்”
மொத்தத்தில் நான்
“சதாவதானி”
மதிப்பெண் போடுவதில் மட்டுமல்ல!! செயலிலும் தான்!!!
நானும்
“உன்னைப் போல்
ஒருவன்”
என் பெயர்
[[[[[[[[[[”இடைநிலை ஆசிரியன்” ]]]]]]]]]]
மேற்கண்ட காட்சிகள் 100 நாட்கள் ஓடியவை மட்டுமல்ல !!!
எங்கள் வாழ்வில் 365 நாட்களும் ஓடிக்கொண்டிருப்பவை !!!
இடைநிலையில் தவிக்கும் எங்களை ஏற்றிவிடுங்கள் !!!
உச்சிக்கு அல்ல !!! உயர்வுக்கு !!!
OPERATER: ப.சரவணன் SHOW: ஊ.O.ந.U.பள்ளி PLASE: போலம்patti. TIME: 09:00
TO 04:30
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...