ஓய்வு பெற இன்னும் மூன்று வாரங்களே உள்ள
நிலையில், டில்லி பல்கலைக்கழக துணைவேந்தரை, கட்டாய விடுமுறையில் செல்ல
உத்தரவிடுமாறு, ஜனாதிபதிக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.
எனினும், இந்த பரிந்துரையை, சில மணி நேரத்தில்,
மத்திய அரசு வாபஸ் பெற்றது. விரும்பவில்லை டில்லி பல்கலைக்கழக
துணைவேந்தராக இருப்பவர் தினேஷ் சிங். இரண்டு ஆண்டுகளுக்கு முன்,
இப்பல்கலைக்கழகத்தில், நான்கு ஆண்டு கால பட்டப்படிப்பை, தினேஷ் சிங்
அறிமுகப்படுத்தினார். இதற்கு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசும் இதை விரும்பவில்லை.
அது முதலே, மனிதவள மேம்பாட்டு துறை
அமைச்சகத்துக்கும், துணைவேந்தர் தினேஷ் சிங்குக்கும், பனிப்போர் நிலவி
வருகிறது. இந்நிலையில், தினேஷ் சிங், வரும் 28ல், ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, அடுத்த துணைவேந்தராக, இஸ்ரோ முன்னாள் தலைவர், கஸ்துாரிரங்கனை
நியமிக்க, அவர் பரிந்துரைத்தார். கஸ்துாரிரங்கன், ஏற்கனவே, டில்லி
பல்கலை.,யில், கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,
கஸ்துாரிரங்கனை துணைவேந்தராக நியமிக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
விரும்பவில்லை. வேறு ஒருவர் பெயரை, பரிந்துரைக்கும்படி கேட்டு கொண்டது.
ஆனால், தினேஷ் சிங் பரிந்துரைக்கவில்லை.
இதற்காக, ஓய்வு பெற மூன்று வாரமே உள்ள
நிலையில், தினேஷ் சிங்கை, கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிடும்படி,
ஜனாதிபதிக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நேற்று காலை பரிந்துரைத்தது.
கஸ்துாரிரங்கன் பெயரை வேண்டும் என்றே, தினேஷ் சிங் பரிந்துரைத்து,
சர்ச்சையை உருவாக்கி, அதன்மூலம் அவர், பதவியில் தொடர நினைக்கிறார் என்ற
குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
தினேஷ் சிங் கூறியதாவது:
நான், 28ம் தேதிக்கு பின், ஒருநாள் கூட
பதவியில் நீடிக்க மாட்டேன். கஸ்துாரி ரங்கனுக்கு பதில், வேறு ஒருவர் பெயரை
பரிந்துரைக்கும்படி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து எந்த
கோரிக்கையும் வரவில்லை. அப்படி வந்திருந்தால், நிச்சயம்
பரிந்துரைத்திருப்பேன். என்னை, கட்டாய விடுமுறையில் செல்ல உத்தரவிட கோரி,
ஜனாதிபதிக்கு, மத்திய அரசு பரிந்துரைத்தது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு தினேஷ் சிங் கூறினார்.
இதற்கிடையில், ஓய்வு பெற மூன்று வாரமே உள்ள
நிலையில், தினேஷ் சிங்கை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு உத்தரவிட ஜனாதிபதி
மறுத்து விட்டார். இதையடுத்து, ஜனாதிபதிக்கு அனுப்பிய பரிந்துரையை, சில
மணி நேரங்களில், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வாபஸ் பெற்றது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...