ஏழை எளிய மாணவர்களுக்கு உத வும் ஸ்மைல் கிளப் எம்.எஸ்.சுவாமி நாதன்
ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கப்பட்டது.ஏழை எளிய மாணவர்களுக்கு
கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் வகையிலான இந்த ஸ்மைல்
கிளப்பை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், ஹோப் நிறுவனம் மற்றும் கிட்ஸ் ஃபார் கிட்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.ஸ்மைல் கிளப் ஒருங்கிணைப் பாளர் பியங்கா வெங்கட்ரமணி கூறும்போது, “தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஏழை மாணவர் களுக்கு உதவுவதுதான் ஸ்மைல் கிளப் நோக்கம். இதற்காக நிதி திரட்டவுள்ளோம்.
ஸ்மைல் கிளப் பின் முதல் முயற்சியாக ‘ஒரு குழந் தையை தத்தெடுத்துக் கொள்ளுங் கள்’ என்ற திட்டத்தை தொடங்கி யுள்ளோம்” என்றார்.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான் என்ற திட்டத்துடன் இணைந்து ஸ்மைல் கிளப் செயல்படும். இந்நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர்அஜய் கே.பரிடா, ஹோப் நிறுவனத் தின் அறங்காவலர் சாமுவேல் ஆப்ரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...