அழைப்பு
விடுத்த அரசு, பேச்சு நடத்தாததால், கருவூல கணக்குத்துறை சங்கங்கள்
ஏமாற்றம் அடைந்துள்ளன.சென்னையில் உள்ள, கருவூல கணக்குத்துறை தலைமையகத்தில்,
சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மதுரை மாவட்ட கூடுதல் கருவூல
அதிகாரி மூர்த்தி, 57, மாரடைப்பால் இறந்தார். 'இயக்குனர் முனியநாதன் அளித்த
டார்ச்சரே இதற்கு காரணம்' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'இயக்குனரை மாற்ற வேண்டும்; மூர்த்தி யின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்' எனக்கோரி, கருவூல கணக்குத்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தலைமைச்
செயலகத்தில், கருவூலத்துறை சங்கங்களுடன், அரசு நேற்று நடத்த இருந்த
பேச்சு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், துறை ஊழியர்கள் ஏமாற்றம்
அடைந்துள்ளனர்.கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க பொதுச்செயலர் சிலுப்பன்
கூறுகையில், ''நிதியமைச்சர் ஊரில் இல்லை எனக்கூறி, பேச்சு ரத்து
செய்யப்பட்டுள்ளது. இது, இயக்குனரை பாதுகாக்கும் முயற்சியா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது. பேச்சு நடத்தி தீர்வு காணாவிட்டால், போராட்டத்தை
தீவிரமாக்குவோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...