சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர்களின் அசல் பிறப்பு சான்றிதழைத் தருமாறு
வற்புறுத்தக் கூடாது என சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கே.கே.செüத்ரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:-
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் கடந்த ஜூலை 27-ஆம் தேதி
ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதில், பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பதிவு
செய்ய தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, பிறப்பு, இறப்பு
சான்றிதழ்கள் அதன் மூலமே வழங்கப்படுகின்றன. மென்பொருள் மூலம் வழங்கப்படும்
சான்றிதழ் ஒவ்வொன்றுக்கும் தனியே ஒரு பதிவு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும், அந்தச் சான்றிதழ்களில் ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும்,
அதோடு சான்றிதழின் உண்மைத் தன்மையை www.crsorgi.gov.in என்ற இணையதளத்தில்
அறிந்து கொள்ளலாம். மேலும், அவ்வாறு அளிக்கப்படும் சான்றிதழ்கள் சட்டப்படி
சரிபார்க்கபட்ட ஆவணங்கள் என்பதால், அவற்றை அரசு சார்ந்த, சாராத
தேவைகளுக்காக பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் பதிவாளர், சார்-பதிவாளர்
ஆகியோர் அளிக்கும் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளலாம். மேலும், சான்றிதழ்
வழங்கும் அதிகாரியின் கையொப்பமிட்ட அசல் சான்றிதழ்களைத்தான் அளிக்க
வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...