கல்வி ஆண்டு துவங்கி, மூன்று மாதம் தாண்டி விட்ட நிலையில், மாணவ,
மாணவியருக்கு இன்னும், புத்தகப்பை, காலணிகள், வண்ண பென்சில் போன்ற இலவச
பொருட்கள் வழங்கப்படவில்லை.
தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 14
வகையான இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. 2011 - 12ல் இந்த
திட்டங்கள் அறிமுகமான போது, பள்ளிகள் திறந்தவுடன் இலவச பொருட்கள்
வழங்கப்பட்டன.
அதனால், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.ஆனால்,
சமீப ஆண்டுகளாக இலவச பொருட்களை பொறுத்தவரை, கல்வி ஆண்டு முடியும் போது
தான் மாணவர்களுக்கு கிடைக்கிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு இறுதித் தேர்வு
துவங்குவதற்கு சில வாரங்கள் முன், மார்ச் மாதம் தான், இலவச காலணிகள்
வழங்கப்பட்டன.இந்த ஆண்டும், இலவச பொருட்களின் வினியோகம் இதுவரை
துவங்கவில்லை. பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை மட்டுமே
இதுவரை
வழங்கப்பட்டுள்ளன.கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள், 'கிரயான்ஸ்'
வண்ணக் குச்சிகள், புத்தகப் பை, காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை.
அதனால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில
மாவட்டங்களில், இருப்பில் மீதமிருந்த பொருட்கள் மட்டும், சில பள்ளிகளில்
வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சிலர் கூறியதாவது:இலவச
பொருட்களில், 'லேப் - டாப்' மற்றும் சைக்கிள் கொடுப்பதில் மட்டும்
அதிகாரிகள் அதிக அக்கறை காட்டுகின்றனர். எனினும், இவை கள்ள சந்தையில்
விற்பனைக்கு வந்து விடுகின்றன.
தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிக மாணவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு பயன்படும் பொருட்களை மிக தாமதமாகவே அரசு வழங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...