Home »
» எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு
இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்.,
பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட
செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில்
சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது.
எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல்,
25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., 'கீட்' மற்றும் 'கேட்' தேர்வு ஏப்., 23, 24ல்
துவங்குகின்றன. இதற்கு மாணவர் பதிவு அக்., 19ல் துவங்கியுள்ளது; மார்ச்,
15ல் முடிகிறது. தேர்வு பிரிவுக்கு, மார்ச், 26 முதல், 30ம் தேதி வரை பதிவு
செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, www.srmuniv.ac.in இணையதளம்,
admissions.india@srmuniv.ac.in மெயில் மற்றும் 044 - 2745 5510, 4743 7500
போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...