இன்றைய தேதியான 5.10.2015க்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இதை அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் 5.10.2015 என்ற தான்
வரும்.
இதை ஆங்கிலத்தில் "பாலின்டிரோம்' என்பர்.
ஒரு எண்ணையோ அல்லது எழுத்தையோ எழுதி, பின்னால் இருந்து படித்தாலும் மாறாமல்
வருவதை ஆங்கிலத்தில் "பாலின்டிரோம்' என்பர். தமிழில் "விகடகவி' என்ற
வார்த்தையை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
இன்றைய தினம் ஏழு இலக்கங்களை கொண்ட "பாலின்டிரோம்' தேதி. 5ம் எண்ணுக்கு
கடவுளின் கருணை என்றும், 10ம் எண்ணுக்கு சாட்சி என்றும், 20ம் எண்ணுக்கு
மீட்பு என்றும், 15ம் எண்ணுக்கு ஓய்வு என்றும் பொருள் இருக்கிறதாம். அதனால்
இந்த தேதிக்கு "ஓய்வு மற்றும் மீட்புக்கு கடவுளின் கருணை தான் சாட்சி'
என்ற பொருளும் இருக்கிறது என எண்கணித நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நூற்றாண்டில் எழு இலக்கங்களை கொண்ட 26 தேதியும், எட்டு இலக்கங்களை
கொண்ட 12 தேதியும்,மொத்தம் 38 "பாலின்டிரோம்' தேதி வருகிறது. 2016,
அக்டோபர் 6 அன்று (6.10.2016) அடுத்த "பாலின்டிரோம்' தேதி வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...