பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு பாது காப்பாக எடுத்துச்செல்ல புதிய முறையை கையாள வேண்டும் என கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.திருச்சி மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத் தலைவர் முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 8.3.2010-ல் பிளஸ் 2 இயற்பியல் தேர்வு நடைபெற்றது. முசிறி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 262 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்காக கோவைக்கு தபாலில் அனுப்பியபோதுஅவை மாயமாயின. இதனால் அந்த 262 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டது.பொதுத் தேர்வு விடைத்தாள் களை திருத்தும் மையங்களுக்கு அனுப்பும்போது அதிகாரிகள் கவனக்குறைவுடன் உள்ளனர். தபால்களுடன் சேர்த்தும், தனியார் பஸ்களிலும் பிற தபால்களுடன் சேர்த்து அனுப்புகின்றனர். இவற்றைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிர்மலாராணி வாதிட்டார். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஆனந்தி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், எடுக்கப்பட்ட நட வடிக்கைகளை விளக்கியிருந்தார்.இதையடுத்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: தேர்வுத்தாள் மாய மானது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தேர்வுத் தாள் மாயமாகும்போது தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே, பொதுத் தேர்வு முடிந்ததும் விடைத் தாள்களை திருத்தும் மையங் களுக்கு மிகுந்த பாதுகாப் புடன் எடுத்துச் செல்ல வேண்டும். இதற் காக புதிய வழிமுறைகளை உரு வாக்கி அமல்படுத்த வேண்டும்.இந்த வழக்கில் மறுதேர்வு எழு திய மாணவர்களுக்கு இழப்பீடு கேட்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவை சம்பந்தப்பட்ட மாண வர்கள் தாக்கல் செய்யவில்லை. இழப்பீட்டுக்காக சம்பந்தப்பட்ட மாணவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...