Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரேயொரு பெண்ணுக்காக நடந்த உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு

         காவலர் பணி ஒதுக்கீட்டு பிரிவில் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, உயர்நீதிமன்ற ஆணையின் பேரில், உதவி ஆய் வாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வு டிஐஜி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் 1,078 காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடத்தப்பட்டது.


         இதைதொடர்ந்து, கடந்த மே மாதம் 23 மற்றும்24 ம் தேதிகளில் எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் நடை பெற்றது. இதில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந் தகம் அருகே உள்ள கடப்பேரி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் லட்சுமணனின் மகள் விதவையான பூங்கோதை காவலர் பணி ஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பித்தார்.இதை தொடர்ந்து, காஞ்சி புரம் மாவட்டத்தில் நடை பெற்ற எழுத்துத் தேர்வில்,எட்டா யிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வெழுதினர். தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 18-ம் தேதி வெளியிடப்பட்டது. அதில் பொதுப்பிரிவின் கீழ்77 பெண்கள் உள்பட 106 பேர் தேர்வாகினர். இதில், பூங்கோதையும் ஒருவர்.இந்நிலையில், காவலர் பணி ஒதுக்கீடு பிரிவில் தேர்வான 48 நபர்களுக்கு உடற்தகுதித் தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அப்போது, திருமணம் ஆனபெண்களுக்கு காவலர் பணி ஒதுக்கீடு பிரிவில் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பூங்கோதை வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் வாதத்தை ஏற்று 26-ம் தேதி பூங் கோதைக்கு உடற்தகுதி தேர்வு நடத்த வேண்டும் என, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் ஆணையத்துக்கு கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது.இதையடுத்து, காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தரசி ஆகியோர் மேற்பார்வையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

பூங்கோதைக்கு நடைபெற்ற முதற்கட்ட தேர்வில், உயரம், எடை மற்றும் 400மீ ஓட்டம் ஆகி யவை நடத்தப்பட்டது. இதில் அவர் தகுதிபெற்றார். இதனால் இன்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 100 அல்லது 200 மீ ஓட்டம் ஆகியவை நடை பெற உள்ளது. இவற்றில் தகுதி பெற்றால், சென்னை தலை மையிடத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்பார்.நீதிமன்ற உத்தரவின்பேரில், பெண் ஒருவருக்காக உடற்தகுதி தேர்வு நடப்பது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் மிக அரிதானது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive