விர்ஜினியா : ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக
சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில்
ஈடுபட்டது.
இந்த முறைகேட்டை, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள
மிழகத்தை சேர்ந்த அரவிந்த் திருவேங்கடம் கண்டுபிடித்து வெளியுலகிற்கு
அம்பலமாக்கினார். சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம்,
அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் பேராசிரியராக உள்ளார்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அரவிந்த், தனது சக பேராசிரியர் மார்க் பெஸ்க் உடன் இணைந்து வோக்ஸ்வேகன்
காரை டெஸ்ட் ட்ரைவ் செய்துள்ளார். அப்போதே, அந்த சாப்ட்வேரின் குளறுபடியை
இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். வோக்ஸ்வேகன் காரில் இருந்து வெளியாகும்
மாசுபாட்டின் அளவு, ஐரோப்பிய தர நிர்ணயத்தை விட 20 மடங்கு அதிகம் என்பதை,
அரவிந்த் வெளிப்படுத்தியுள்ளார். வோக்ஸ்வேகன் நிறுவனம் சர்வதேச அளவில்
விற்பனை செய்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட டீசல் கார்களில், மாசு
கட்டுப்பாட்டு அளவை, சாப்ட்வேர் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு
செய்துள்ளது என, இ.பி.ஏ., (சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை)
குற்றஞ்சாட்டியது. கார் வெளியிடும் புகையில், காரீயத்தின் (Lead) அளவை
குறைத்துக் காட்டுவதற்கென, தனி சாப்டவேரை வோக்ஸ்வேகன் தமது கார்களில்
பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில், வோக்ஸ்வேகன்
கார்கள், வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு
வந்துள்ளன. இந்த டீசல் கார்கள் வெளியிடும் புகையில் புற்றுநோயை உண்டாக்கும்
கார்சினோஜெனிக், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் டை ஆக்சைடு' போன்ற நச்சு
வாயுக்கள் உள்ளன. இவை, சிறிய அளவில் காற்றில் கலந்தாலே ஆபத்தை விளைவிக்கும்
என தற்போது தெரியவந்துள்ளது. வோக்ஸ்வேகனின் கார்கள் உட்பட, ஆடி, ஸ்கோடா
மற்றும் சீயட் போன்ற கார்களுக்கும் வோக்ஸ்வேகனின் தொழில்நுட்பம்
பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கார்கள்
இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற விவரம் வெளிவரவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...