பூமிக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், ராட்சத விண்கல் ஒன்று, மணிக்கு
1,25,529 கி.மீ., வேகத்தில் பூமியை நெருங்கி வருகிறது. அவ்விண்கல் வரும்
அக்., 31ம் தேதி(30-10-15) புவி சுற்றுவட்ட பாதையை கடக்கும் என நாசா
தெரிவித்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமியை தற்போது ஒரு ராட்சத விண்கல்
நெருங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது. அந்த விண்கல்லுக்கு 2015 டி.பி.,145
என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 4,99,000 கி.மீ., துாரத்தில் பூமியை,
வரும் அக்., 31ம் தேதி கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விண்கல்
சுமார் 280மீ., முதல் 620மீ., வரை விட்டம் கொண்டது. இவ்விண்கல்லை
அக்.,10ம் தேதி நாசா கண்டுபிடித்தது.
மணிக்கு 1,25,529 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் இந்த விண்கல், பூமியை
தாக்காமல் புவிசுற்றுவட்டப் பாதையை கடந்து செல்லும் என நாசா விஞ்ஞானிகள்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒருவேளை இவ்விண்கல் பூமியில் மோதினால் கடும்
விளைவுகள் ஏற்படும் எனவும், ஓசோன் மண்டலம் முற்றுலும் அழியும் எனவும்,
அதனால் பருவ நிலை மாற்றங்கள் நிகழும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...