'அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின் கையில் உள்ளது; அவர்கள் பொறுப்பை
உணர்ந்து செயல்பட்டால் தான் மாணவர் கற்றல் திறனின் இலக்கை எளிதில் அடைய
முடியும்,'' என, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்தார்.
அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் தொடக்க கல்வித் துறை
சார்பில் மண்டல ஆய்வுக் கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி
அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார். எஸ்.எஸ்.ஏ., திட்ட இணை இயக்குனர்
நாகராஜமுருகன் முன்னிலை வகித்தார்.
இணை இயக்குனர் செல்வராஜ் இதை துவக்கி வைத்து பேசுகையில், ''தொடக்கக் கல்வியில், தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வாசித்தல்,
எழுதுதல் திறன் மற்றும் கணிதம், அறிவியலில் அடிப்படை அறிவை வளர்ப்பது
கூட்டத்தின் நோக்கம். ஆசிரியர்கள் தங்களின் அர்ப்பணிப்பை அளித்தால் தான்
மாணவர் அறிவுத் திறனை பெற முடியும். அரசு பள்ளிகளின் தரம் ஆசிரியர்களின்
கையில் உள்ளது. பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், மாணவர் கற்றல் திறன்
இலக்கை அடைய முடியும்,'' என்றார்.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜாமணி, ஆர்.சி., பள்ளிகளின்
கண்காணிப்பாளர் ஜோசப், எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள்
சுப்பிரமணியன் (திண்டுக்கல்), ஜெயலட்சுமி (தேனி) மற்றும் உதவித் தொடக்க
கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...