Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கலை தேர்வுக்கு குறைந்தது மவுசு

அரசு தேர்வுத் துறை சார்பில், கலைப்பாட தொழில்நுட்ப தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படும். தென் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும்கேரளாவில் இருந்தும் இந்த தேர்வு எழுத தமிழகத்துக்கு வருவர்.

எட்டாவது படித்தவர் இளநிலை (லோயர்), 10ம் வகுப்பு முடித்தவர் உயர்நிலை (ஹையர்) சான்றிதழ் தேர்வு எழுதுவர் ஓவியம், தையல், அச்சுக்கலை, சிற்பம், விவசாயம், கைத்தறி போன்ற பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.இதில் தேர்ச்சி பெறுபவர்கள், தமிழக அரசின் மூன்று மாத ஆசிரியர் பயிற்சி பெற்ற பிறகு, சிறப்பாசிரியர்களாக வேலையில் சேர முடியும்.

2012ல், 16 ஆயிரம் பேர், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில்துவக்கப் பள்ளி ஆசிரியர் பணி வழங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான, தேர்வுக்கான விண்ணப்பவினியோகம் நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே, விண்ணப்பிக்க ஆளின்றி சேவை மையங்கள் காலியாக இருந்தன.


இதற்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காது என்பதால், தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகையில், 'சிறப்பாசிரி யர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்று மாத பயிற்சி வகுப்பை, எட்டு ஆண்டுகளாக, அரசு நடத்தவில்லை. இதனால், 55 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்' என்றார். 




4 Comments:

  1. கணிதம், அறிவியல், சமூகஅறிவியல், மற்றும் மொழிப்பாடங்கள் மட்டுமே மாணவர்களுக்கு பெரும் பயன் தரக்கூடியதும், அவர்களை விஞ்ஞானிகளாகவோ,பெரும் வல்லுநர்களாகவோ உருவாக்குவதற்கும்மேலேசொல்லப்பட்டிந்த ஐந்து பாடங்கள் மட்டுமே போதூ...மா...ன..து.... என்ற எண்ணங்கள் பெரும்பான்மையாய் இருக்கும் வரை , இத்தகைய கலைப் பாடங்களுக்கு எங்கிருந்து மவுசு உண்டாகும், சொல்லுங்கள் பார்க்கலாம்.?
    கலைப்பாடங்கள் அவசியமில்லை,! இதனால் பிரயோசனம் இல்லை எனும் அதிகார வர்க்கத்தின் சிந்தை மாறும் வரை இதே நிலைதான்.
    என் உள்ளத்தில் ஏற்பட்ட வலிகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.!
    வானத்தில் ஏறி வட்டமிடும் விண்கலன் செய்து பறக்கவிட்டாலும் சரி,! அந்த வாணலாவிய கட்டிடங்கள், கோபுரங்கள் கட்டினாலும் சரி, தொல் பொருளை ஆராய்ச்சி செய்தாலும் சரி எல்லோருக்கும் இந்த கலைப் பாடங்களமிகவும் முக்கியம் ஆகும்.
    ஓவியப் பாடத்தை படிப்பதால் சிந்தனை சிறப்பாகும்.கூர்ந்து கவணிக்கும் திறன் வளரும் , படைப்பாற்றல் உண்டாகும். யோகா, தியானம் இவைகளை படிப்பதை க் காட்டிலும் ஓவியம் படிப்பதால் மனவெழுச்சிஉண்டாகும், மனம் அமைதி பெரும், உடல் சுகமும் உறசாகமும் உன்டாகும்.. எந்ந்த பாடத்தை படித்தாலும்அதற்கு அகரம் ஓவியம் தான் . அகரத்திற்கு முன் பிள்ளை கற்பது ஓவியம் தான் என்பதை யாரும் எளிதில் மறக்கவோ,மறுக்கவோ முடியாது

    ReplyDelete
  2. ஓவியம் வரைய கற்றால் தான், கம்ப்யூட்டரிலோ அல்லது கையாலோ இராக்கெட் வரைந்துகாட்டி விளக்க முடியும்.மற்றும் கட்டிங்கள் அடித்தளம், மேல்தளம் என வரைந்து விளக்க முடியும் ஓவிய அறிவு இல்லாமல் எந்தத்துறையிலும் சாதிப்பது என்பது சிந்திக்க வேண்டியதாகும். மேலை நாட்டினர் நம. நாட்டைதேடி வருவது நம்முடைய கலை,கலாச்சாரத்தையும் விரும்பித்தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது்.
    அயல் நாட்டினர் நமது கலைகளை கற்று வளர்த்துக்கொண்டிருக்க .... நாம் மறந்து இகழ்ந்துக் கொண்டிருக்கிறொம்.

    பெங்களூருவில் வசிக்கும் நான்
    கடந்த 2012 ல் பகுதி நேர ஓவியப் பயிற்றுநராக ரூ:5000/= சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். பின்னர் ரூ:7000/= ஆக உயர்த்தப்பட்டது. நாள் ஒன்றுக்கு 250 கிலோ மீட்டர் தூரம் பிரயாணம் செய்து ஏற்றுக்கொண்ட பணியை சரியாக உள்ளத்து உணர்வுகளோடு நிறைவாக செய்து வருகிறேன் .

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive